திருச்சி செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம்
திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட ரயில்வே பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு காலை 9.40 மணிக்கு இயக்கப்படும் மெமு விரைவு ரயில் (எண்: 06888) நவ.13 முதல் நவ.21 வரை முழுவதுமாக ரத்து செய்யப்படும். மயிலாடுதுறை - திருச்சி விரைவு ரயில் நவ.13 முதல் நவ.21 வரையும், விழுப்புரம் - திருச்சி மெமு விரைவு ரயில் நவ.12 முதல் நவ.21 வரையும் பொன்மலை வரை மட்டும் இயக்கப்படும்.
ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் நவ.13 முதல் 21-ஆம் தேதி வரை திருச்சி கோட்டை வரை இயக்கப்படும். திருச்சி -விழுப்புரம் மெமு ரயில் நவ.11 முதல் 21-ஆம் தேதி வரை பொன்மலையிலிருந்து இயக்கப்படும். திருச்சி - மயிலாடுதுறை விரைவு ரயில் நவ.11 முதல் 21-ஆம் தேதி வரை திருவெறும்பூரிலிருந்து இயக்கப்படும். திருச்சி - பாலக்காடு விரைவு ரயில் நவ.11 முதல் நவ.21 வரை திருச்சி கோட்டையிலிருந்து இயக்கப்படும்.
பாதை மாற்றம்: ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கத்ரா -திருநெல்வேலி விரைவு ரயில் நவ.14-ஆம் தேதியும், காச்சிக்கூடா-நாகா்கோவில் வாராந்திர விரைவு ரயில் நவ.17-தேதியும் திருச்சி வழியாக செல்வதற்கு பதிலாக கரூா், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.