செய்திகள் :

திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா!

post image

திருச்சி: புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நேர்த்திக்கடனாக 1,000 ஆடுகள் பலியிடப்படுவது வழக்கம்.

திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் ஆறு கண் பாலம் அருகில் அமைந்து உள்ளது குழுமாயி அம்மன் கோவில். சோழ மன்னர்களின் குல தெய்வமாக வணங்கப்பட்டு, தற்போது திருச்சி நகர காவல் தெய்வமாக விளங்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் குட்டிக்குடி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இந்த ஆண்டு திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு காளியாவட்டம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பக்தர்கள் அம்மனை கோயிலில் இருந்து மேளதாளம் முழங்க தேரில் புத்தூர் மந்தைக்கு அழைத்து வந்தனர்.

இதையும் படிக்க: தெலங்கானா விபத்து: மீட்புப் பணியில் கேரள 'கடாவர்' நாய்கள்!

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டிக்குடித்தல் இன்று(மார்ச். 6) காலை வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி புத்தூர் மந்தையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். அம்மனின் அருள் பெற்ற மருளாளியை (சாமி ஆடுபவர்) பக்தர்கள் மேளதாளம் முழங்க தோளில் தூக்கி வந்தனர். அப்போது வாத்தியங்களும் இசைக்கப்பட்டது.

பக்தர்கள் நேர்த்திக்கடனாகவும், வேண்டுதலுக்காகவும் கொண்டு வந்திருந்த ஆடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மந்தைக்கு முன் உள்ள தேரின் அருகில் மருளாளி வந்ததும் ஆடுகள் மருளாளியிடம் தூக்கி கொடுக்கப்பட்டது.

மருளாளி அவற்றின் கழுத்தைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சி குடித்தது பரவசத்தை ஏற்படுத்தியது. முதலில் அரசு சார்பில் மாவட்ட நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட ஆட்டுக் குட்டியின் ரத்தத்தைக் குடித்தார். குட்டிக்குடித்திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்புப் பணிக்காக 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறனர்.

புத்தூர் பகுதி முழுவதும் பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கத்தினர் சார்பில் வழி நெடுங்கிலும் அன்னதானங்கள் போடப்பட்டு வருகிறது.

பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத திமுக ஆட்சி: இபிஎஸ்

திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் வெவ்வேறு பகுதிகளில் நடந்... மேலும் பார்க்க

மக்காச்சோள வர்த்தகத்துக்கு 1% சந்தைக்கட்டணம் விலக்கு!

தமிழ்நாட்டில் மக்காச்சோள வர்த்தகம் மேற்கொள்ள தற்போதுள்ள ஒரு சதவீத சந்தைக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.இது குறித்து தமிழக அரசின் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் வெ... மேலும் பார்க்க

கை ரிக்‌ஷாவைப்போல சாதியும் ஒழிக்கப்பட வேண்டும்: நீதிமன்றம்

நீதிமன்ற உத்தரவுகள் வெறும் காகிதளவில் மட்டுமே இருப்பதாக நீதிபதி தெரிவித்தார்.தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து அந்த சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்... மேலும் பார்க்க

2024-ல் குற்ற வழக்குகள் குறைவு: தமிழக அரசு

சொத்து மற்றும் மனித உடலுக்கு எதிரான வழக்குகள் 2024ம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:கடந்த 2024ம் ஆண்டிற்கான ... மேலும் பார்க்க

அமித் ஷா வருகை: 2 நாள்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையையொட்டி ராணிப்பேட்டையில் இன்றும்(மார்ச். 6) நாளையும்(மார்ச். 7) ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கபட்டுள்ளது. மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) உருவாக்கப்பட... மேலும் பார்க்க

தமிழகத்தில் மேலும் 17 கிராம பசுமைக் காடுகள் உருவாக்கம்!

தமிழகத்தில் மேலும் 17 கிராம பசுமைக் காடுகள் (மரகத பூஞ்சோலைகள்) உருவாக்கப்படவுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:வனத்துறை அமைச்சரால் 100 மரகதப்பூஞ்சோலைகள் (கிராம மரப்பூங்காக்கள்)... மேலும் பார்க்க