செய்திகள் :

திருச்செந்தூர் கோயிலில் யானை மிதித்ததில் 2 பேர் பலி!

post image

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயில் யானை மிதித்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் இரண்டாவது படை வீடாகத் திகழ்வது திருச்செந்தூர். பிரசித்தி பெற்ற கோயிலில் தெய்வானை என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோயில் யானையான தெய்வானை மதம் பிடிப்பதுபோல் இன்று நடந்துகொண்டது. திடீரென இன்று காலை யானைப் பாகனான உதயகுமாரையும், கோயிலுக்கு வந்த அவரது உறவினர் சிசுபாலன் என்பவரையும் தாக்கியது.

கோயில் யானை தெய்வானை கோயிலுக்கு வந்த சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த யானைப் பாகன் உதயகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

யானை மிதித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் திருச்செந்தூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூர்: மேலும் 2 நாள்களுக்கு இணைய சேவை முடக்கம்!

மணிப்பூரில் வன்முறையால் இணையசேவை முடக்கப்பட்டுள்ள நிலையில், 7 மாவட்டங்களில் மேலும் 2 நாள்களுக்கு இணைய சேவை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

தில்லியில் காற்று மாசு எதிரொலி: விமான சேவை பாதிப்பு!

புதுதில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் எதிரொலியாக, தில்லி விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.தில்லியின் பெரும்பாலான இடங்களிலும், அடர்த்தியான புக... மேலும் பார்க்க

உ.பி.: மருத்துவமனை தீ விபத்து - மேலும் ஒரு குழந்தை உயிரிழப்பு!

உத்தரப் பிரதேசத்தின் ஜான்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தின்போது மீட்கப்பட்ட ஒரு குழந்தை, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளது.ஜான்சி அரசு மர... மேலும் பார்க்க

தாராவி நிலத்தை அரசு அதானிக்கு தாரைவார்க்கலாமா? - தேர்தல் பிரசாரத்தில் காங்.

தாராவி நிலத்தை முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் தலைவர்களின் இன்றைய தேர்தல் பிரச்சாரப் பதிவுகள் அமைந்துள்ளன. மகாராஷ்டிரத்தில் மொத்தம் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு, வரும் நவ.20-ஆம் தேதி ஒரே கட்டம... மேலும் பார்க்க

ஜார்க்கண்டிலும் புல்டோசர் அரசியல்! தேர்தல் பிரசாரம் நிறைவு!

ஜார்க்கண்ட் மாநில பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் பாஜகவினர் புல்டோசர் அரசியலை குறிப்பிட்டுப் பேசியுள்ளது இப்போது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.அண்மையில், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நபர... மேலும் பார்க்க

தங்கம் விலை 9% சரிவு! நிபுணர்கள் கூறுவது என்ன?

தங்கத்தின் விலை அதன் உச்சபட்ச விலையிலிருந்து 9 சதவீதம் சரிந்துள்ளது. தங்கத்தின் இந்த தொடர் விலைச்சரிவை நிபுணர்களும் ஆதரிக்கின்றனர். அமெரிக்காவில் அதிகரித்துவரும் பணவீக்கம் காரணமாக சர்வதேச சந்தையில் தங... மேலும் பார்க்க