திருப்பதியை வைத்து அரசியல் செய்வதா? ரூ.100 கோடி உண்டியல் பணம் குறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்
திருப்பதி கோயிலை அரசியலுக்காகப் பயன்படுத்துவதா? என்று ஆந்திர மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசம் - பாஜகவை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கேள்வி எழுப்பியிருக்கிறது.
ஆந்திரம் மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி கோயில் உண்டியலில் ரூ.100 கோடி கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பாக, விடியோ ஆதாரத்துடன் பாஜக புகார் தெரிவித்திருந்தது.
மேலும், இந்த திருட்டுச் சம்பவத்தில், மொத்த பணமும் வெளிப்படைத் தன்மையுடன் விசாரிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டு திருப்பதி திருமலை தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், ஏழுமலையான் பெயரை தெலுங்கு தேசம் கட்சி தவறாகப் பயன்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறது.