நுகர்வோர் விலைக் குறியீடு (CPI Data) சொல்லும் தகவல்கள் என்ன? | IPS Finance - 335
திருமணத்தை நிறுத்திவிட்டு, கட்டிப்பிடித்த மணமகனிடம் கட்டணம் வசூல் செய்த சீனப்பெண் - என்ன நடந்தது?
சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையிடம் இருந்து 'கட்டிப்பிடித்ததற்கான கட்டணம்' கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த இப்பெண், தனது திருமணத்திற்காக மாப்பிள்ளை வீட்டாரிடம் இருந்து 200,000 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 23 லட்சம்) வரதட்சணை பெற்றுள்ளார்.

ஆனால், திருமணம் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு ’அந்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய விரும்பவில்லை' என்று கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
மாப்பிள்ளைக்கு வருமானம் மிகவும் குறைவு, அவர் மிகவும் நேர்மையானவர் என்பதால் அந்தப் பெண் திருமணத்தை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வரதட்சணை பணத்தை மாப்பிள்ளை வீட்டார்கள் திருப்பிக் கேட்டுள்ளனர். அதற்கு அந்தப் பெண் 200,000 யுவானில் இருந்து 30,000 யுவான் (சுமார் ரூ. 3.5 லட்சம்) பிடித்துக் கொண்டு மீதமுள்ள யுவானைத் தான் திருப்பித் தருவதாகக் கூறியுள்ளார்.

'கட்டிப்பிடித்ததற்கான கட்டணம்' மற்றும் இதர செலவுகளுக்காக அந்தத் தொகையை எடுத்துக்கொள்ளப்போவதாகவும் கூறியிருக்கிறார்.
அதாவது திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டின் போது, புகைப்படக்காரர் கட்டிப்பிடித்து போஸ் கொடுக்கச் சொன்னதால் மட்டுமே மாப்பிள்ளை அப்பெண்ணைக் கட்டிப்பிடித்ததாகக் கூறப்படுகிறது.
இறுதியில் இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, பெண் 170,500 யுவானை (சுமார் ரூ. 20 லட்சம்) மாப்பிள்ளை வீட்டாரிடம் திருப்பித் தர ஒப்புக்கொண்டிருக்கிறார்.
மாப்பிள்ளையிடம் இருந்து 'கட்டிப்பிடித்ததற்கான கட்டணம்' கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.