செய்திகள் :

திருமணமே வேண்டாம்: எதிர்நீச்சல் நாயகியின் வைரல் விடியோ!

post image

திருமணமே வேண்டாம் என்று கூறும் எதிர்நீச்சல் நாயகி பார்வதியின் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர் எதிர்நீச்சல் 2. இத்தொடரை இயக்குநர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். எதிர்நீச்சல் முதல் பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகிவருகிறது.

எதிர்நீச்சல் தொடரின் முதல்பாகத்தில் மதுமிதா நாயகியாக நடித்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் அவருக்கு பதிலாக பார்வதி நடித்து வருகிறார்.

சின்ன திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமான பார்வதி, சன் தொலைக்க்காட்சியில் ஏராளமான சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பின்னர் தொடர்களில் நடிக்கத் தொடங்கினார்.

இவர் நடிகை தேவையானியுடன் புதுப்புது அர்த்தங்கள் தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த நிலையில், சன் தொலைக்காட்சியில் சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியின் சிறப்புத் தொகுப்பில் எதிர்நீச்சல் தொடரில் நடிக்கும் சபரிக்கும், பார்வதிக்கும் இடையே சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இரண்டில் எது பிடிக்கும் என்று தொகுப்பாளர் கேட்பார், அதற்கு இருவரும் பதில் அளிக்க வேண்டும் என்பதுபோன்று நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டு இருந்தது.

அதில், காதல் திருமணமா? பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணமா? என்று தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு, பார்வதி திருமணமே வேண்டாம் என்று பதில் கூறினார். சபரி காதல் திருமணம் என்றும் கூறினார்.

ஆண் நண்பர்கள் பிடிக்குமா? பெண் நண்பர்கள் பிடிக்குமா? என்ற கேள்விக்கு சபரிக்கு ஆண் நண்பர்கள் பிடிக்கும் என்றும் பார்வதி பெண் நண்பர்கள் பிடிக்கும் என்று கூறினார்.

இதையும் படிக்க: 'என்னப்பா இப்படி எழுதியிருக்க...’ டிராகன் இயக்குநரை பாராட்டிய ரஜினிகாந்த்!

நீங்கள் சிங்கிளா? கமிட்டடா? என்ற கேள்விக்கு பார்வதி சிங்கில் என்றும் கரிகாலன் இரண்டுமே இல்லை என்றும் சொல்கிறார். பூனை பிடிக்குமா நாய் பிடிக்குமா என்ற கேள்விக்கு இருவரும் நாய் பிடிக்கும் என்று கூறுகிறார்கள்.

இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருவதுடன், ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டும் வருகிறது.

டெஸ்ட் வெளியீட்டுத் தேதி!

நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடித்த டெஸ்ட் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.மண்டேலா திரைப்படத்தின் தயாரிப்பாளாரான சஷிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன... மேலும் பார்க்க

மூக்குத்தி அம்மன் - 2 நடிகர்கள் அறிவிப்பு!

மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.முக்குத்தி அம்மன் முதல் பாகத்தில் நடிகை நயன் தாரா அம்மன் வேடத்திலும் ஆர்ஜே பாலாஜி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்... மேலும் பார்க்க

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.06-03-2025வியாழக்கிழமைமேஷம்இன்று ஒரு சில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரி... மேலும் பார்க்க

ஓய்வு பெறுகிறாா் டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் சரத் கமல்

சென்னையில் நடைபெறவுள்ள டபிள்யுடிடி உலக கன்டென்டா் டேபிள் டென்னிஸ் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளதாக புதன்கிழமை ஜாம்பவான் சரத் கமல் தெரிவித்துள்ளாா். 25 ஆண்டுகளாக இந்திய டேபிள் டென்னிஸ் அரங்கில் கோலோச்சிய... மேலும் பார்க்க

பிராக் மாஸ்டா்ஸ்: பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் முன்னிலை

பிராக் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்திய ஜிஎம் ஆா்.பிரக்ஞானந்தா. அரவிந்த் சிதம்பரம் ஆகியோா் தொடா்ந்து கூட்டாக முன்னிலை வகித்து வருகின்றனா். செக். குடியரசு தலைநகா் பிராகில் மாஸ்டா்ஸ் செஸ் போட்டி நடைபெற... மேலும் பார்க்க

தேசிய சீனியா் மகளிா் ஹாக்கி: ம.பி., ஜாா்க்கண்ட் வெற்றி

தேசிய சீனியா் மகளிா் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் புதன்கிழமை ஆட்டங்களில் மத்திய பிரதேசம், ஜாா்க்கண்ட் மாநில அணிகள் வெற்றி பெற்றன. ஹரியாணா மாநிலம், பஞ்ச்குலாவில் 15-ஆவது தேசிய சீனியா் மகளிா் ஹாக்கி... மேலும் பார்க்க