வாழ்வில் ஒரு சிலர் மட்டுமே வெற்றி பெறுகிறார்களே அதற்கு என்ன காரணம்?
திருமணம் மீறிய உறவு; பேசுவதை நிறுத்திய பெண்... கொடூரமாக கொலைசெய்த இளைஞர்!
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள அகரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ரமா (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது). இவருக்குத் திருமணமாகி, கணவர், இரண்டு மகன்கள் உள்ளனர். இவரின் கணவர் வழக்கம் போல் வேலைக்குச் சென்றுவிட்டார். மகன்கள் இருவரும் பள்ளிக்குச் சென்று விட்டனர்.
ரமா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து அவரைச் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதில் ரமா உயிரிழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அதற்குள் அந்த மர்ம நபர் தனது பைக் மற்றும் இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு ஓடியுள்ளார்.
அங்கிருந்தவர்கள் இந்த சம்பவம் குறித்து ஏரல் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கூறியுள்ளனர். விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் விசாரணையில் ரமாவை கொலைசெய்தது அதே பகுதியைச் சேர்ந்த லிங்கராஜ் என்ற இளைஞர் என்பது தெரியவந்துள்ளது.
விசாரணையில், “ரமாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லிங்கராஜ் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளாக திருமணம் மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த கணவர், மனைவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து ரமா, லிங்கராஜிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் ரமாவைக் கொலைசெய்துள்ளார்” என்பது தெரியவந்துள்ளது. தலைமறைவான லிங்கராஜை போலீஸார் தேடி வருகின்றனர்.