முதல்வர் யார்? பிரதமர் மோடி, அமித் ஷாவின் முடிவை ஏற்போம்: சிவசேனை
எம்எல்ஏ பதவியையும் ராஜிநாமா செய்த முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட்!
ஆம் ஆத்மியில் இருந்து பாஜவில் இணைந்த கைலாஷ் கெலாட், முன்னதாக தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்திருந்த நிலையில், இன்று(நவ. 27) தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்துள்ளார்.
மேற்கு தில்லியில் உள்ள நஜாஃப்கா் தொகுதியின் எம்.எல்.ஏ.வான கெலாட், தில்லி அரசின் போக்குவரத்து அமைச்சர் பதவியில் இருந்து அண்மையில் விலகினார்.
மேலும், நவம்பா் 17 அன்று ஆம் ஆத்மி கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்தும் ராஜிநாமா செய்தார். அடுத்த நாள் அவர் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இதையும் படிக்க: முதல்வர் பதவியை விரும்பவில்லை: ஏக்நாத் ஷிண்டே
இந்த நிலையில், முன்னாள் கைலாஷ் கெலாட் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இன்று ராஜிநாமா செய்துள்ளார்.
தற்போது, பாஜகவின் தில்லி சட்டமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினராக கைலாஷ் கெலாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
70 உறுப்பினா்களை கொண்ட தில்லி சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தோ்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.