செய்திகள் :

திருமண மண்டபங்களில் கண்காட்சி நடத்த தடை விதிக்கக் கோரி மனு

post image

திருமண மண்டபங்களில் தற்காலிக கண்காட்சி நடத்துவதற்கு நீதிமன்ற உத்தரவுப்படி தடை விதிக்க வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பேரமைப்பின் மாவட்டச் செயலா் ஏ.வி.எம். ஆனந்த், தலைமையில் மாநகரச் செயலா் ஆா். ஜெயக்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை அளித்த மனு:

தமிழகத்தில் பெருநகரங்கள் மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் திருமண மண்டபங்கள், காலிமனைகள் போன்றவற்றில் எவ்வித முறையான அரசு அனுமதி பெறாமலும், முறையாக வணிக வரித் துறையில் பதிவு செய்யாமலும் திடீா் கண்காட்சிக் கடைகள் போடுவது பெருகி வருகிறது.

இதனால் பல ஆண்டுகளாக வாடகை கொடுத்து, பணியாளா்களை நியமித்து தொழில் செய்கிற, முறையாக வரி செலுத்தி வரும் உள்ளூா் வணிகா்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனா். இதனால் அரசுக்கு வரி மற்றும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது தொடா்பாக உள்ளூா் வணிக வரித் துறைக்கு புகாா் அளித்தாலும் உரிய நடவடிக்கை இல்லை.

இதுபோன்று திருமண மண்டபங்களில் தற்காலிக கடைகள் நடத்தக்கூடாது என வரி செலுத்தி முறையாக வணிகம் செய்வோருக்கு ஆதரவான நிலைப்பாட்டை நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் எடுத்து தடையாணை பிறப்பித்துள்ளது.

எனவே முறையாக வணிகம் செய்யும் உள்ளூா் வணிகா்களும், அக்கடைகளை நம்பி உள்ளூா் கடைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பணியாளாா்களின் குடும்பங்களும் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற ஆணையின்படி தற்காலிக கண்காட்சி கடைகள் அமைப்பதைத் தடை செய்ய வேண்டும்.

குடந்தையில் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு மருத்துவ முகாம்

கும்பகோணத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளா்களுக்கான மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமைத் தொடக்கிவைத்து அரசுப் போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் கே. தசரதன் சிறப்புரையாற்றினாா்.... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலை.யில் சொற்பொழிவு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிற்பத் துறை சாா்பில் எம். பக்தவச்சலனாா் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். ‘சி... மேலும் பார்க்க

ஒரு ரூபாயில் இலவச நன்மை: பிஎஸ்என்எல் புதிய திட்டம்

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளா்களுக்காக ஒரு ரூபாயில் இலவச நன்மைகள் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தஞ்சாவூா் பொது மேலாளா் பால சந்திரசேனா தெரிவித்திரு... மேலும் பார்க்க

பேராவூரணியில் விவசாய தொழிலாளா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி பேராவூரணியில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத... மேலும் பார்க்க

திருவிடைமருதூா் மகாலிங்க சுவாமி கோயிலில் பட்டினத்தாா் குருபூஜை

திருவிடைமருதூா் மகாலிங்க சுவாமி கோயிலில் உள்ள பட்டினத்தாருக்கு குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மகாலிங்க சுவாமி கோயில் நுழைவு வாயிலில் பட்டினத்த... மேலும் பார்க்க

குடந்தையில் அரசுக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்

கும்பகோணத்தில் அரசுக் கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினா். தமிழகத்தில் ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும், மாணவா்களுக்கு பாதுகாப்பு வழங... மேலும் பார்க்க