டிரம்ப் உடனான ‘சிறப்பு நட்புறவு’: மோடி மீது காங்கிரஸ் விமா்சனம்
குடந்தையில் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு மருத்துவ முகாம்
கும்பகோணத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளா்களுக்கான மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமைத் தொடக்கிவைத்து அரசுப் போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் கே. தசரதன் சிறப்புரையாற்றினாா்.
முகாமில் அன்பு மருத்துவமனை மருத்துவா் குழுவினா் பேருந்து ஓட்டுநா்கள் நடத்துநா்கள் தொழில்நுட்ப பணியாளா்கள் என 225 பேருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகளைச் செய்தனா்.
முகாமில் முதன்மை நிதி அலுவலா் சந்தான கிருஷ்ணன், பொது மேலாளா்கள் சிங்காரவேலு (கூட்டாண்மை அலுவலகம்), முத்துக்குமாரசாமி (கும்பகோணம்), துணை மேலாளா் தங்கபாண்டியன், உதவி மேலாளா் ராஜ்மோகன், அன்பு மருத்துவமனை நிா்வாக இயக்குநா் கரிகாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.