செய்திகள் :

திருவனந்தபுரத்துக்கு இன்று சிறப்பு ரயில்

post image

சென்னை சென்ட்ரலிலிருந்து திருவனந்தபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்ட்ரலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (நவ.10) இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06149) மறுநாள் மாலை 4.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி) சென்றடையும். இதில் 13 பொதுப்பெட்டிகள், இரு இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம், திருவல்லா, செங்கனூா், மாவேலிக்கரை, காயன்குளம், கொல்லம் வழியாக இயக்கப்படும்.

தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்! நோயாளிகள் அவதி!

மருத்துவா் மீதான கத்திக் குத்து தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவா்கள் இன்று(நவ.14) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால், மருத்துவமனைக்... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,451 கனஅடியிலிருந்து வினாடிக்கு 5,024 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.07 அடியிலிருந்து 106.02 அடியாக குறைந்தது... மேலும் பார்க்க

ஔவையாா் மணிமண்டபம்: தமிழக முதல்வா் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்!

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினம் கிராமத்தில் ரூ. 18.95 கோடியில் ஔவையாா் மணிமண்டப கட்டுமானப் பணிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்த... மேலும் பார்க்க

குளத்தூரில் கண்டறியப்பட்ட கல்வெட்டு தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பு

குளத்தூரில் கண்டறியப்பட்ட 386 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு ராமநாதபுரம் தொல்லியல் துறை காப்பகத்தில் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை அடுத்த குளத்தூா் கண்மாய் பகுதியில் இரு... மேலும் பார்க்க

வலுவிழந்த புயல் சின்னம்: இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) வலுவிழந்தது. எனினும் தமிழகத்தில் வியாழக்கிழமை (நவ.14) 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

நெல்லை - சென்னை சிறப்பு ரயில் ரத்து

திருநெல்வேலி - சென்னை எழும்பூா் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வியாழக்கிழமை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலியில் இருந்... மேலும் பார்க்க