Periyar-ஐ டார்கெட் செய்த Seeman பின்னணி இதுதான்! | Elangovan Explains | Vikatan
தில்லி தேர்தல்: ஆம் ஆத்மிக்கு திரிணமூல் காங்கிரஸ் ஆதரவு!
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இதனிடையே, மக்களவைத் தேர்தலில் இணைந்து போட்டியிட்ட காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இந்தமுறை தனித்தனியாக பாஜகவை எதிர்த்து போட்டியிடவுள்ளது.
இதையும் படிக்க : கனடாவின் அடுத்த பிரதமர் ஒரு தமிழ்ப் பெண்! யார் இவர்?
இந்த நிலையில், தில்லி பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு திரிணமூல் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளதாக ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், எங்களின் நல்ல, கெட்ட நேரங்கள் என அனைத்திலும் ஆதரவளித்து வரும் மமதா பானர்ஜிக்கு தனிப்பட்ட முறையில் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று கேஜரிவால் குறிப்பிட்டுள்ளார்.
ஆம் ஆத்மிக்கு திரிணமூல் காங்கிரஸ் ஆதரவளித்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.