செய்திகள் :

தீபாவளி டைம்: தாறுமாறாகக் குறைந்த கார் விலை; BMW டு சுசூகி எவ்வளவு குறைந்துள்ளது?|பக்கா கணக்கு இதோ!

post image

லதா ரகுநாதன்

பலரின் நீண்ட நாள் கனவாக ஒன்று இருக்கிறது. அது என்ன கொஞ்சம் யோசியுங்கள்.

வெரி சிம்பிள், சொந்த காரில் மனைவி, குழந்தைகளோடு ஒரு நீண்ட சூப்பர் பயணம்.

'அந்தக் கனவை நனவாக்கச் சரியான நேரம் இதுவா?' என்பதை விரிவாகப் பார்க்கலாம்... வாங்க...

முதலில், இப்போது கார் வாங்கச் சரியான தருணமா?

சில ஆண்டுகளாகவே, கார் விற்பனை மிகவும் மந்தமான நிலையிலேயே இருந்து வந்தது. இதற்குப் பல காரணங்கள் இருந்தன.

ஆனால், அந்தக் காலம் இப்போது மாறிவிட்டது.

கார் நிறுவனங்களின் தற்போதைய தகவல்களின் படி, கார் விற்பனை கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

இதற்கு இரண்டு காரணங்கள்.

முதலில், ஜிஎஸ்டி குறைப்பு. இதனால் பல கார்களின் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

லதா ரகுநாதன்
லதா ரகுநாதன்

இரண்டாவது, ரிசர்வ் வங்கியின் கடந்த மானிட்டரி பாலிசியில், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் மூன்று தவணையாகக் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன் முதல் தவணை செப்டம்பர் மாதம் செய்யப்பட்டது.

அடுத்தது நவம்பர் மாதம் மற்றும் கடைசியாக டிசம்பரில் ஒன்று நடக்க உள்ளது. இதனால் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் மிகவும் குறைந்துள்ளது.

மேலும், ரெப்போ வட்டி விகிதமும் 0.50% ஆக கடந்த அறிக்கையில் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கக்கூடிய கடன் தொகையின் வட்டி விகிதம் கணிசமாகக் குறையக்கூடும்.

இந்த வட்டி விகித மாற்றத்திற்கும், கடன் வட்டிக்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாலும் கூட, ரெப்போ விகிதம் குறைக்கப்படும்போது வங்கிகளின் கைகளில் பண இருப்பு அதிகரிக்கும். இதனால், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவில் கடன் கொடுக்க இயலும். தொடர்ச்சியாக ரெப்போ விகிதமும் குறைக்கப்படும்போது, இது கடன் வட்டி விகிதத்தைக் குறைக்கும்.

தற்போதுள்ள கார் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைந்தபட்சமாக 8.5% ஆகவும், அதிகபட்சமாக 12.5% ஆகவும் உள்ளது. ஆனால், வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடும்.

ஆகவே கார் கடனுக்குச் செல்லும் முன், வங்கிகள் மற்றும் அதன் வட்டி விகிதத்தைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

ஜி.எஸ்.டி | GST
ஜி.எஸ்.டி | GST

இப்போது ஜிஎஸ்டிக்கு வருவோம். இது என்ன வண்டி என்பதைப் பொருத்து மாறுபடுகிறது.

அ. சிறிய வண்டிகள் அதாவது 1200 சிசி திறனும், 4000 மிமீ நீளமும் கொண்ட வண்டிகளுக்கு 18% ஜி.எஸ்.டி. இதுவே டீசல் வண்டியாக இருந்தால் 1500 சிசி, 4000 மிமீ இருக்கலாம்.

ஆ. சொகுசு வண்டி மற்றும் ஸ்பெஷல் யுடிலிடி வண்டிகள் அதாவது SUVகளுக்கு 40%. இந்த வகை வண்டிகள் மேலே குறிப்பிட்டுள்ள திறன் மற்றும் நீளத்திற்கு அதிகமாக உள்ளவை.

இ. எல்லா வகை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் 5%.

ஈ. ஹைபிரிட் வண்டிகள் என்று கூறப்படுபவற்றுக்கு அவை சிறியதாக இருந்தால் 18%. பெரியதாக இருந்தால் 40%.

இந்த வட்டி விகிதக் குறைப்பால் மெர்சிடிஸ் பென்ஸ், லேண்ட் ரோவர் போன்ற சொகுசு கார்களின் விலையில் முப்பது லட்சம் வரையில் விலை குறைப்பு ஏற்பட்டுள்ளது. பி.எம்.டபுள்யூவில் ரூ.4.48 லட்சம், டொயோட்டாவில் ரூ.3.49 லட்சம் முதல் ரூ.2.78 லட்சம் வரையில், ஸ்கோடாவில் ரூ.3.3 லட்சம் வரை விலை குறைந்துள்ளது.

இப்போது டவுன் பேமெண்ட்டுக்கு வருவோம்.

சாதாரணமாக வாடிக்கையாளர் கார் லோன் எடுக்கும்போது, அதன் மொத்த விலையில் 10-20% வரை டவுன் பேமெண்டாக செலுத்த வேண்டும்.

ஆனால், இந்த விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடும். உதாரணமாக, இந்தியன் வங்கியில் புது கார் வாங்கக் கொடுக்கப்படும் கடனுக்கு 10% டவுன் பேமெண்ட் செலுத்த வேண்டும். இது ஆன் ரோடு விலையில் கணக்கிடப்படுகிறது.

பணம்
பணம்

HDFC வங்கியில் சில வகை கடன்களுக்கு எந்தவித டவுன் பேமெண்ட்டும் தேவையில்லை. ஆனால், இவை அந்தக் குறிப்பிட்ட வகையில் இல்லாமல் போனால், 10% - 20% என்ற விகிதத்தில் கணக்கிடப்படுகிறது. இதனைப்போல், ஒவ்வொரு வங்கியும் அவற்றின் தேவைக்கு ஏற்ற ஒரு திட்டமும், அவர்களுக்கென குறிப்பிட்ட சலுகைகளையும் வழங்குகிறது. அதனால், முதலில் இந்தத் தகவல்களைப் பார்த்துவிட்டுப் பின் முடிவெடுக்கலாம்.

நீங்கள் வாங்கப்போகும் வண்டியின் விலை சுமார் ரூ.5 லட்சம் என்று வைத்துக்கொண்டால், இதற்குத் தேவைப்படும் டவுன் பேமெண்ட் தொகை சுமார் ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரையில் நீங்கள் கைகளில் வைத்திருக்க வேண்டும்.

இப்போது மாதா மாதம் எவ்வளவு இ.எம்.ஐ தொகை செலுத்துவது சரியாக இருக்கும் என்று பார்க்கலாம். இந்தத் தவணை பேமெண்ட் தொகை, நாம் எடுக்கும் கடன் தொகையின் அளவு மற்றும் அதை எடுக்கும் கால அளவு இவற்றைக்கொண்டு மாறுபடும். அதிக வருடக் கடனாக எடுக்கும் போது மாதா மாதம் செலுத்த வேண்டிய இ.எம்.ஐ குறைவாக இருக்கும்.

உதாரணமாக, பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.10 லட்சம் ஒரு வருடத்திற்கு எடுத்தால், இ.எம்.ஐ ரூ.87,451. ஆனால் இதே தொகையை 5 வருடத்திற்கு எடுத்தால் ரூ.20,758. பத்து வருடம் என்றால் ரூ 16,602.

கடன்
கடன்

ஆகவே, கடன் கொடுக்கப்படும் வருடம் அதிகரித்தால் மாதா மாதம் செலுத்த வேண்டிய தவணைத்தொகை குறைவாக இருக்கும்.

சாதாரணமாக, உங்கள் நிகர வருமானத்தில் 10-15% வரையில் உங்கள் மாதத் தவணைத் தொகை இருக்கலாம். கார் கடன் தவிர மற்ற கடன்கள் உங்களுக்கு முதலிலேயே இருக்கும் என்றால், இந்த விகிதம் இந்த அனைத்து கடன் தவணைகளுக்கும் சேர்த்து உங்கள் வரிக்கு முன்னதான மாத வருமான தொகையில் 35% மேல் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

ஆனால் இந்த விகிதங்கள் ஒவ்வொருவரின் தேவை மற்றும் வீட்டு நிலைமையைப் பொறுத்து மாறுபடும். இந்த அதிகபட்ச விகிதங்கள் சாதாரணமான ஒரு மாத சம்பளம் பெறுபவருக்குச் சரியாக வரும்.

ஆகவே, உங்கள் மாத வருமானம் ரூ.50,000 என்றால், உங்கள் கார் இ.எம்.ஐ ரூ.5,000 முதல் ரூ.7,500 வரையில் இருக்கலாம். மற்ற கடன்களும் உண்டு என்றால், அந்த மாத தவணைகளையும் சேர்த்து மொத்தமாக அது ரூ.17,500 க்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். மேலே கூறப்பட்டுள்ள அனைத்தும் சேர்ந்து, நீங்கள் எவ்வளவு ஆண்டுகள் கார் கடன் எடுக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்யும். வங்கிகள் 1 – 7 ஆண்டுகள் வரை சாதாரணமாக கார் கடன் திட்டங்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால், தேவைக்கேற்ப 8 வருடம் அல்லது 10 வருடம் வரையில் கூட சில வங்கிகள் கடன் கொடுக்கிறார்கள்.

கடன்
கடன்

இப்போது உங்களால் செலுத்தக்கூடிய இ.எம்.ஐ கைவசம் உள்ளதா சரி பார்த்துக்கொள்ளுங்கள். மேலே கூறியுள்ள விகிதத்தின் அளவில் நீங்கள் மாதம் செலுத்த முடிகின்ற மாதத் தவணை தொகையைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள். பின் அவற்றின் அளவின்படி நீங்கள் எவ்வளவு வருடக் கடன் எடுத்தால் சுலபமாக இந்தத் தொகைக்குள் கட்டி முடிக்க இயலும் என்பதைச் சரி பார்த்து, அவ்வளவு வருடக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

உதாரணமாக, மேலே குறிப்பிட்டுள்ள ரூ.16,602 மாதம் செலுத்த இயலும். உங்களுக்கு வேறு கடன் நிலைகள் எதுவும் இல்லை என்றால், நீங்கள் தாராளமாக 5 வருடக் கடன் திட்டத்தில் நுழையலாம். மேலே கூறியுள்ள அனைத்தையும் ஒன்றுசேர யோசித்தால், நீங்கள் எந்த வகை கார், எந்த பட்ஜெட்டில் வாங்க வேண்டும் என்பது தெரிய வரும்.

சில உதாரண விலைகள்

· மாருதி சுஸுகி ஆல்டோ கே10: ₹ 3.70 - 5.45 லட்சம்

· டாடா டியாகோ: ₹ 4.57 - 7.82 லட்சம்

· மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ: ₹ 3.50 - 5.25 லட்சம்.

OLX, Indian Auto போன்ற இணையதளங்களில் பல வாகனங்களின் விலைகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

சில வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் வாகன விலைப் பட்டியலை வெளியிடுவார்கள்.

உங்கள் அருகில் உள்ள வாகன டீலர்களை நேரடியாகத் தொடர்புகொண்டு விலைகளைப் பெறலாம்.

கார்
கார்

கார்களின் விலையிலும் குறைப்பு ஏற்பட்டுள்ளது.

வங்கிகளின் கைகளிலும் பணப்புழக்கம் அதிகரிப்பதால், சற்றே எளிதாகக் கடன் கிடைக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

வரப்போகும் பணவியல் கொள்கைக் கூட்டத்தொடரில், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனால், நேரடியாக கடன் வட்டி விகிதம் குறைக்கப்படலாம்.

ஆகையால், கார் வாங்க இது நல்ல நேரம்தான். தீபாவளி, புது வருடம் என்று கார் டீலர்கள் பல சலுகைகள் கொடுக்கக்கூடும்.

இவை எல்லாவற்றையும் மனதில் கொண்டு..

புது டிரஸ்.. புது ஸ்வீட்.. புது பட்டாசு.. புத்தம் புது கார்..

கலக்குங்க சந்துரு..!!

நின்று நிதானித்து கார்/பைக் வாங்குங்கள்!

ஜிஎஸ்டி விலைக் குறைப்பால்... கார் பைக்குகளின் விலை மகிழ்ச்சி அளிக்கும் அளவிற்குக் குறைந்திருக்கின்றன. மின்சாரக் கார்களின் வரியில் மாற்றம் இல்லை என்றாலும்... உதிரிபாகங்களின் விலை குறைந்திருப்பதால், இவற... மேலும் பார்க்க

இந்திய ராணுவம்: 1960 முதல் போர்களில் பங்கேற்ற MiG-21 விமானத்துக்கு ஓய்வு - இனி என்ன ஆகும்?

இந்திய ராணுவத்துக்கு 1960 முதல் சேவையாற்றிவந்த MiG-21 ரக ஜெட் விமானங்கள் ஓய்வு பெற்றுவிட்டன. இவை 1965 இந்தியா–பாகிஸ்தான் போர், 1971 இந்தியா–பாகிஸ்தான் போர், 1999 கார்கில் போர்மற்றும் 2019 புல்வாமா தாக... மேலும் பார்க்க

GST 2.0: XUV கார் முதல் ஆக்டிவா ஸ்கூட்டர் வரை - என்ன என்ன வாகனங்களின் விலை குறைந்திருக்கிறது?

இன்று முதல் (செப்டம்பர் 22) ஜிஎஸ்டி 2.0 நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த திருத்தப்பட்ட வரி புதிதாக வாகனம் வாங்குபவர்களுக்கு பலனளிக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் ஆரம்பநிலை ஹேட்ச்பேக்ஸ் கார்களில் 40,00... மேலும் பார்க்க

Car sunroof: இவ்வளவு ஆபத்து இருக்கு பாஸ் சன்ரூஃபில்! - காருக்கு எதுக்குங்க சன்ரூஃப்?

சமீபத்தில் ஒரு வீடியோ சோஷியல் மீடியாக்களில் செய்தியாக வந்தது. பார்க்கவே கொஞ்சம் பதைபதைப்பாக, மனசுக்குப் பாரமாக இருந்தது. பெங்களூருவில் ஒரு மஹிந்திரா காரில், சன்ரூஃபில் ஏறி நின்று கொண்டு பயணித்த சி... மேலும் பார்க்க

EV Vehicles: அறிமுகமான TVS Orbiter Electric Scooter | Photo Album

EV: இது எந்த அளவுக்கு சிக்கனம்னு சொன்னா அப்படியே ஷாக் ஆய்டுவிங்க!Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEkவணக்கம்,BIG BREAKINGS முதல்... அர... மேலும் பார்க்க