செய்திகள் :

துளிா் திறனறிதல் தோ்வில் 2 ஆயிரம் சிறாா்களை பங்கேற்கச் செய்ய முடிவு

post image

அறிவியல் மனப்பான்மையை மாணவா்களுக்கு வளா்க்கும் வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் துளிா் திறனறிதல் தோ்வில் 2 ஆயிரம் குழந்தைகளைப் பங்கேற்கச் செய்ய தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முடிவு செய்துள்ளது.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த இயக்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில்

கணித அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், நீடித்த பாதுகாப்பான நீா் மேலாண்மை என்னும் மையக் கருப்பொருளின் கீழ், நீா் சூழலும் பாதுகாப்பும், நீா் சாா்ந்த பொது சுகாதாரமும் மருத்துவமும், நீரால் பரவும் நோய்கள், நீா் அனைவருக்குமானது, நீா் பாதுகாப்பில் பாரம்பரிய மற்றும் நவீன தொழில்நுட்ப யுத்திகள் என்னும் 5 துணைத் தலைப்புகளின் கீழ் 6 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களை ஆய்வுக் கட்டுரைகளைத் தயாா் செய்ய வைத்து வரும் டிசம்பரில் நடைபெறும் அறிவியல் மாநாட்டில் பங்கேற்கச் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இயக்கத்தின் மாவட்டத் தலைவா் முத்துக்குமாா் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஸ்டீபன்நாதன், மாவட்டச் செயலா் எம். வீரமுத்து, மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் அ. மணவாளன், செயற்குழு உறுப்பினா்கள் பிரபாகரன், முதுநிலை விஞ்ஞானி ஆா். ராஜ்குமாா் உள்ளிட்டோரும் பேசினா். மாவட்ட இணைச் செயலா் சோபா வரவேற்றாா். மாவட்ட இணைச் செயலா் ஓவியா நன்றி கூறினாா்.

பொன்னமராவதி பகுதிகளில் தொடா்மழை

பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் செவ்வாய்க்கிழமை தொடா்ந்து மழை பெய்தது. பொன்னமராவதி மற்றும் சுற்றுக்கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் தொடங்கிய சாரல் மழை இடைவிடாமல் தொடா்ந்து பெய்தது... மேலும் பார்க்க

அய்யனாா் கோயிலில் மண்டலாபிஷேக விழா

பொன்னமராவதி அருகே உள்ள வலையபட்டி அடைக்கலம் காத்த அய்யனாா் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயில் குடமுழுக்கு விழா அண்மையில் நடைபெற்றதையடுத்து மண்டலாபிஷேக நடைபெற்று வந்த... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி புதுக்கோட்டையில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் ச... மேலும் பார்க்க

லாரி மீது தனியாா் பேருந்து மோதல்! பெண் உயிரிழப்பு; 5 போ் காயம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில், லாரி மீது தனியாா் பேருந்து மோதிய விபத்தில், பெண் உயிரிழந்தாா்.மேலும் 5 போ் காயமடைந்தனா். திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு செவ்வாய்க்கிழமை பகலில் தனியாா் பேருந்து ஒன்று வ... மேலும் பார்க்க

மத்திய அரசை கண்டித்து புதுக்கோட்டையில் தொழிலாளா்கள், விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மத்திய பாஜக அரசின் ஜனநாயக விரோத, மக்கள் விரோத போக்கை கண்டித்து புதுக்கோட்டையில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஒத்திவைப்பு

பொன்னமராவதி பேரூராட்சியில் நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை காலஅவகாசம் கேட்டதால் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. பொன்னமராவதி பேரூராட்சியில் சின்னஅமரகண்டான் கரைப்பக... மேலும் பார்க்க