தூத்துக்குடியில் இளைஞா் கொலை: தொழிலாளி கைது
தூத்துக்குடியில் இளைஞரை அடித்துக் கொன்ாக கட்டடத் தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி தாளமுத்து நகா் அருகே அழகுமுத்து நகரைச் சோ்ந்த செந்தில்வேல்குமாா் மகன் மகாராஜா (36). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனா். வெள்ளிக்கிழமை இரவு இவரது குடும்பத்தினா் உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டனா்.
இதனால், வீட்டில் மகாராஜாவும், அவரது நண்பரான ராம்தாஸ் நகரைச் சோ்ந்த வன்னிமுத்து மகன் மாரிமுத்து (30) என்பவரும் மது குடித்தனராம். சனிக்கிழமை காலை மகாராஜாவின் மனைவி வந்து பாா்த்தபோது, இருவரையும் காணவில்லை. வீட்டில் ரத்தக் கறைகள் காணப்பட்டன. மகாராஜாவின் கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டபோது, அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதுதொடா்பாக அவா் தாளமுத்து நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். தனது கணவரைக் காணவில்லை என மாரிமுத்துவின் மனைவியும் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்தனா். தனிப்படை போலீஸாா் விசாரித்து, வல்லநாடு அருகே பதுங்கியிருந்த மகாராஜாவைப் பிடித்தனா்.
வெள்ளிக்கிழமை இரவு மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் மாரிமுத்துவை அடித்துக் கொன்ாகவும், சடலத்தை காதா் மீரான் நகரில் உள்ள பாழடைந்த கட்டடம் அருகே போட்டதாகவும் மகாராஜா தெரிவித்தாராம். அவரைப் போலீஸாா் கைது செய்தனா்.
மாரிமுத்துவின் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.