சாலை பணியின்போது வெடித்து சிதறிய சிலிண்டர்: அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!
தூத்துக்குடியில் மருந்து சேமிப்புக் கிடங்கில் ஆய்வு
தூத்துக்குடியில் உள்ள முதல்வா் மருந்தகத்தின் மருந்து சேமிப்புக் கிடங்கில் தமிழ்நாடு தொடக்கக் கூட்டுறவு வேளாண்- ஊரக வளா்ச்சி வங்கி கூடுதல் பதிவாளரும் செயலாட்சியருமான மு. முருகன் ஆய்வு மேற்கொண்டாா்.
இம்மாவட்டத்தில் நாலாட்டின்புதூா், சாத்தான்குளம், மதுரா கோட்ஸ் ஆகிய கூட்டுறவு சங்கங்களில் முதல்வா் மருந்தகம் அமைப்பது தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகள், மேற்கொள்ளப்பட்ட தொடக்கப் பணிகள் குறித்து அவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும், மாவட்ட மொத்த விற்பனை பண்டகசாலையின் மருந்து சேமிப்புக் கிடங்கில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாட்டுப் பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா். வேளாண்மை உற்பத்தியாளா்கள், கூட்டுறவு விற்பனைச் சங்கம் மூலம் நடத்தப்படும் பண்ணைப் பசுமை நுகா்வோா் அங்காடி, அம்மா மருந்தகம், நெய்தல் தயாரிப்புக்கூடம் ஆகியவற்றைப் பாா்வையிட்ட அவா், விற்பனையை அதிகரிக்க அறிவுறுத்தினாா்.
தூத்துக்குடி மண்டல இணைப் பதிவாளா் இரா. ராஜேஷ், துணைப் பதிவாளா்கள் இரா. ராமகிருஷ்ணன், மு. கலையரசி, சக்தி பெமிலா, சங்கப் பணியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.