செய்திகள் :

தூத்துக்குடி: மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் துன்புறுத்தல் விவகாரம்: தாளாளர், முதல்வர் கைது!

post image

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் சல்மா என்ற பெயரில் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உடன்குடி கிறிஸ்தியா நகரத்தைச் சேர்ந்த பொன்சிங் என்பவர் பணியாற்றி வந்தார்.  கடந்த மாதம் 22-ம் தேதி தூத்துக்குடியில் வருவாய் வட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக இப்பள்ளியில் 9 மாணவர்கள் மற்றும் 6 மாணவிகளை உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் அழைத்து சென்றார்.  

கைது செய்யப்பட்ட பொன்சிங்

அங்கு முதல் நாள் போட்டி முடியாததால் மறுநாள் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவ-மாணவிகள், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் இரவில் தூத்துக்குடியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார்கள். அப்போது, பொன்சிங், மாணவிகள் சிலரிடம் மது குடியுங்கள் என்று வற்புறுத்தியும், ஆபாசமாக இரட்டை அர்த்தத்தில் பேசி அத்துமீறியதாகவும் கூறப்படுகிறது.

வெளியில் சொன்னால் இனி எந்த போட்டிகளுக்கும் அழைத்துச் செல்ல மாட்டேன் எனக் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் கூறிய நிலையில், பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்று இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. பெற்றோர்கள், தங்களது உறவினர்களுடன் பள்ளிக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.

பெற்றோர்கள் முற்றுகை

இதுபற்றி அறிந்த குழந்தைகள் நல அலுவலர் அலெக்ஸ், தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அதிகாரி சிதம்பரநாதன், திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், தாசில்தார் பாலசுந்தரம், குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். அவர்கள் பள்ளி நிர்வாகம், பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மாணவிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர். பள்ளி நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை வேலையில் இருந்து நீக்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது, உடற்கல்வி ஆசிரியரை கைது செய்ய வேண்டும். பள்ளி தாளாளர், முதல்வர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக போலீஸாரிடமும் பெற்றோர்கள் புகார் செய்தனர். அதன்பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து கோவையில் பதுங்கி இருந்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கை போலீஸார் நேற்று இரவில் கைது செய்து திருச்செந்துர் அழைத்து வந்தனர்.

முதல்வர் சார்லஸ் ஸ்வீட்லி - பொன்சிங்

இந்த நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தை மறைத்ததாகவும், இந்த விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது என மாணவ, மாணவிகளிடம் மிரட்டியதாகவும் தாளாளர் அகமது மற்றும் முதல்வர் சார்லஸ் ஸ்வீட்லி ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட மூவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

தண்ணீர்: 8 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்; இது மத்தியப் பிரதேச அதிர்ச்சி!

மத்தியப்பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாரத் ஜாதவ் (27). பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர் தன் அத்தை வீடு இருக்கும் இந்தர்கர் கிராமத்துக்குச் சென்றிருக்கிறார். நேற்று ஆழ்துளை க... மேலும் பார்க்க

பெண்டிங் வழக்குகள்: சிக்கிய `பவாரியா கேங்’... 22 ஆண்டுகளை கடந்த தாளமுத்து நடராஜன் கொலை வழக்கின் நிலை

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வழக்குகள், மாநில, தேசிய அளவில் கவனம் பெறும். நிதி மோசடி தொடங்கி பாலியல் கொடூரங்கள், கொலைகள், சாதிய கொடுமைகள் என பல விஷயங்களுக்கு நாமும் `உச்’ கொட்டி இருப்போம். `அந்த வழ... மேலும் பார்க்க

சேலம்: கணவர் மீது சந்தேகம்; 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்!

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே நெய்மலை அக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி மாதம்மாள். இவர்களுக்கு மனோரஞ்சனி, நித்திஸ்வரி என இரண்டு மகள்கள் இருந்தனர். தற்போது மாதம்மாள் 7 மாத கர்ப்பிணி... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; பேசுவதை நிறுத்திய பெண்... கொடூரமாக கொலைசெய்த இளைஞர்!

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள அகரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ரமா (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது). இவருக்குத் திருமணமாகி, கணவர், இரண்டு மகன்கள் உள்ளனர். இவரின் கணவர் வழக்கம் போல் வேல... மேலும் பார்க்க

நாமக்கல்: 23 மணிநேரம் நடந்த விஜிலன்ஸ் ரெய்டு, லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்து... மேலும் பார்க்க

திருடுபோன வாகனத்தை திருப்பிக் கொடுக்க லஞ்சம்; 18 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கு - காவலருக்கு 3 ஆண்டு சிறை!

திருப்பூர் பி.கே.ஆர் காலனியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (50). கடந்த 2006-ம் ஆண்டு பொன்னுச்சாமியின் இருசக்கர வாகனம் திருடு போனது. இது குறித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பொன்னுச்சாமி புகார் அளித்... மேலும் பார்க்க