செய்திகள் :

`தெற்கின் மேல் சமூக, அரசியல், பண்பாட்டுப் படையெடுப்பு...' - உகாதி வாழ்த்துச் செய்தியில் முதல்வர்!

post image

நாளை தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கான புத்தாண்டு விழாவான உகாதி கொண்டாடப்படவிருக்கும் நிலையில், வாழ்த்து செய்தி பகிர்ந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முதல்வரின் Ugadi வாழ்த்து செய்தி:-

திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழின் உடன்பிறப்பு மொழிகளான தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் புத்தாண்டாகக் கொண்டாடும் உகாதி திருநாள் நாளை (30-03-2025) கொண்டாடப்படுகிறது.

முதல்வரின் வாழ்த்து செய்தி

தமிழ்நாட்டில் உள்ள மொழிச்சிறுபான்மையினரை என்றும் மதித்துப் போற்றி அவர்களின் உற்ற தோழனாய் விளங்குவது கழக அரசு. உகாதி திருநாளுக்கு அறிவிக்கப்பட்ட அரசு விடுமுறை அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் இரத்து செய்யப்பட்டாலும் 2006-ஆம் ஆண்டு அதனை மீண்டும் நடைமுறைப்படுத்தியவர் அப்போது முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆவார்.

'சமூக, அரசியல், பண்பாட்டுப் படையெடுப்பு'

தமிழ் முதலிய திராவிட மொழிகள் பேசும் தென் மாநிலங்கள் அனைத்தும் தொகுதி மறுசீரமைப்பில் தங்கள் குரல் நெரிக்கப்படும், நாடாளுமன்றத்தில் வலிமை குறைக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் நிலையில்... நமது ஒற்றுமையை மார்ச் 22 அன்று சென்னையில் வெளிப்படுத்தி இருந்தோம். மேலும், அடுத்தடுத்த கூட்டங்கள் நடைபெறவுள்ளன. நாடு முழுவதும் நமது முன்னெடுப்புக்குக் கவனமும் ஆதரவும் பெருகி வருகிறது.

ஸ்டாலின்

இன்று தென்மாநிலங்கள் பொருளாதாரரீதியாக அடைந்துள்ள வளர்ச்சிக்கு முதன்மையான காரணங்களில் ஒன்று அரை நூற்றாண்டுக்கு முன்னரே இந்தித் திணிப்பை எதிர்த்து நாம் நடத்திய மொழிப்போர்தான். இப்போது மீண்டும் இந்தித் திணிப்பு மூலம் அந்த வளர்ச்சியையும் நமது மொழி அடையாளத்தையும் அழிக்கத் திட்டமிட்ட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த வேளையில், தாய்மொழியின் அருமையை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் உணர்த்த வேண்டும். மொழி இருந்தால்தான் இனம் இருக்கும். தெற்கின் மேல் தொடுக்கப்படும் சமூக, அரசியல், பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த அடுத்த தலைமுறையையும் நாம் ஆயத்தப்படுத்த வேண்டும். இதையே எனது உகாதி புத்தாண்டுச் செய்தியாக, கோரிக்கையாக உங்கள் முன்வைக்கிறேன்.

அறுசுவைப் பச்சடி, மாவிலைத் தோரணம், வண்ணக்கோலம் என எழுச்சியோடு புத்தாண்டை வரவேற்கும் தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது உகாதி திருநாள் நல்வாழ்த்துகள். நமது மொழி, அரசியல் உரிமைகளைக் காப்பதற்கான ஊக்கத்தை வழங்குவதாக இந்த உகாதி திருநாள் அமையட்டும்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

'ஆரோக்கியமாகவும், உயிருடனும்' - கைலாசா அறிவிப்பு; KGF பி.ஜி.எம் உடன் என்ட்ரி கொடுத்த நித்தியானந்தா

நித்தியானந்தாவை சுற்றி சர்ச்சை ஓயவே ஓயாது போல. தொடர் வழக்குகளால் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை விட்டு வெளியேறிய நித்தியானந்தா, 'கைலாசா' என்ற தனிநாட்டை உருவாக்கியுள்ளதாகவும், அங்கிருந்து பேசுவதாகவு... மேலும் பார்க்க

'ஈரான் மீது குண்டு வீசப்படும்' - ட்ரம்ப் மிரட்டலின் பின்னணி?

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, பிரான்ஸ், பிரிட்டன், பாகிஸ்தான், வடகொரியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிடம்தான் ஆணு ஆயுதங்கள் இருக்கின்றன. பிற நாடுகளிடம் அணு ஆயுதங்கள் இல்லை. அவை ஐ.நா-வின் அணு ஆயுத பரவல்... மேலும் பார்க்க

ஒன் பை டூ

டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க“உண்மை நிலவரம் தெரியாமல் பேசியிருக்கிறார் விஜய். மூன்று கோடிக் கட்சித் தொண்டர்கள், 52 வருட அரசியல் கட்சி, 30 வருட ஆட்சிப் பொறுப்பு என்று தமிழக அரசியலில் மட்... மேலும் பார்க்க

`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்

கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனுார் வந்த மதுரை ஆதீனம் 293வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``கிராம தெய்வ வழிபாடு முக்கியமானது. மதுரை ... மேலும் பார்க்க

'இதுவரை அரசு பள்ளிகளில் 1,17,310 மாணவர்கள் சேர்க்கை' - அன்பில் மகேஸ் பெருமிதம்

தமிழ்நாட்டு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வேகமாக நடந்து வருவது குறித்து தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பவதாவது..."தமிழ்நாடு முழுவதும் அரச... மேலும் பார்க்க

'உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்' கூறும் யோகி ஆதித்யநாத்; 'தரவுகள் எங்கே?' கேட்கும் கார்த்தி சிதம்பரம்

சமீபத்திய பாட்காஸ்ட்டில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "உத்தரப்பிரதேசத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கனடா, பெங்காலி, மராத்தி கற்று தருகிறோம். இதனால், உத்தரப்பிரதேசத்தில் புதிய வேலைவாய்... மேலும் பார்க்க