செய்திகள் :

தெலங்கானாவில் 6,000 ஆண்டுகள் பழமையான கல் கோடாரி கண்டெடுப்பு!

post image

தெலங்கானா மாநிலத்தில் 6,000 ஆண்டுகள் பழமையான கல் கோடாரி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள குந்திரம்பள்ளி கிராமத்தில் கி.மு. 4000 ஆண்டிற்கு முந்தைய காலத்தில் செய்யப்பட்ட பளபளப்பான கல் கோடாரி கண்டெடுக்கப்பட்டது.

வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் செய்யப்பட்ட கருவியான இது, 15x5x3 நீளம், அகலம், தடிமனில் கருப்பி பசால்ட் கல்லினால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கோடாரி குந்தரம்பள்ளி, எபூர் கிராமங்களுக்கிடையே கிடைத்ததாக தொல்பொருள் ஆய்வாளர் சிவனகிரிரெட்டி தெரிவித்தார்.

கண்டெடுக்கப்பட்ட கல் கோடாரி

"நம் சந்ததியின் பாரம்பரியத்தைப் பாதுகாப்போம்" என்ற விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக டாக்டர் ரெட்டி சனிக்கிழமை நடத்திய கணக்கெடுப்பின் போது இந்தக் கோடாரி அடையாளம் காணப்பட்டது.

இந்தக் கல் கருவி குந்தரம்பள்ளிக்கும் புதிய கற்காலத்திற்கும் உள்ள தொடர்பைக் குறிக்கிறது என்று கூறிய அவர், கருவி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் காகதீயர் காலத்தைச் சேர்ந்த ஐந்து நாக சிற்பங்கள் இருப்பதைக் குறிப்பிட்டார்.

ஜார்க்கண்டில் 1 நக்சலைட்டு சுட்டுக்கொலை

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 1 நக்சலைட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் சாய்பாசாவில் ஜார்க்கண்ட் காவல்துறை மற்றும் கோப்ரா படைக்குழுவின் 209-ஆவது பிர... மேலும் பார்க்க

வக்ஃப் வாரிய மசோதா திருத்தங்களுக்கு நாடாளுமன்றக் குழு இன்று ஒப்புதல்!

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளுக்கு இன்று ஒப்புதல் அளிக்கப்படும் என்று அக்குழுவின் தலைவர் பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் த... மேலும் பார்க்க

கும்பமேளா துயர சம்பவம் வருத்தமளிக்கிறது! -ராகுல் காந்தி

பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் பலியானதும், பலர் காயமடைந்துள்ள செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி தெரிவ... மேலும் பார்க்க

கும்பமேளா கூட்ட நெரிசல்: பலி 31-ஆக உயர்வு!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமே... மேலும் பார்க்க

கும்பமேளா கூட்ட நெரிசல்: நிலைமையை கேட்டறிந்தார் பிரதமர் மோடி!

கும்பமேளா கூட்ட நெரிசல் பற்றிய நிலைமையை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் தொலைபேசியில் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கடந்த ஜன.13-ஆம் தேதி தொடங்கிய மகா கும்ப... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் நீராட வேண்டாம்: உ.பி. முதல்வர்!

திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் நீராட வேண்டாம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயி... மேலும் பார்க்க