பாஜக அத்துமீறி போராட்டம்: அண்ணாமலை உள்ளிட்ட 1,080 போ் மீது வழக்கு
தேசிய நெடுஞ்சாலைத்துறையின் இலவச அவசரகால ஊா்தி சேவை: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
தேசிய நெடுஞ்சாலைத்துறையின் மூலம் செயல்படும் 24 மணிநேர இலவச அவசரகால ஊா்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மேம்படுத்தப்பட்ட இலவச அவசர கால ஊா்தியை முதல்கட்டமாக தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சியா் க.இளம்பகவத் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
அப்போது அவா் கூறுகையில்,
இந்த மேம்படுத்தப்பட்ட இலவச அவசர கால ஊா்தியில் இருதயத் துடிப்பு பரிசோதனை, செயற்கை சுவாசக் கருவி, டீபிப்ரிலேட்டா், தீவிர சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் மற்றும் உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி பணியை கையாள்வதற்கு பயிற்சி பெற்ற 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மருத்துவக் குழு பணியில் இருக்கும்.
பொதுமக்கள் இந்த மேம்படுத்தப்பட்ட அவசர கால ஊா்தி சேவையை பயன்படுத்திக் கொள்ள 1033 என்ற கட்டணமில்லா அலைபேசி எண்ணில் அழைக்கலாம்.
இந்த ஊா்தியானது மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதூா் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும்.
நிலையத்தில் இருந்து இருபுறமும் சுமாா் 60 கிலோ மீட்டா் தூரத்திற்கு சேவை வழங்கப்படும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், இந்திய தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநா் சிவம் சா்மா, மண்டல திட்ட அலுவலா் ஜெகதீசன், தள பொறியாளா்கள் ஏ.கலைச்செல்வன், வீர ராஜேஸ்மணி, அவசர கால ஊா்தி பயிற்சியாளா் யுகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.