அரசுப் பேருந்தில் இளைஞா் வெட்டிக்கொலை: 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் போலீசில் சரண்
தேசிய பத்திரிகை நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: தேசிய பத்திரிகை நாளையொட்டி, பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் பத்திரிகை, ஊடகத்தில் பணியாற்றுபவர்களை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 ஆம் தேதி தேசிய பத்திரிகை நாளாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தியப் பத்திரிக்கை சபை(The Press Council of India) தோற்றுவிக்கப்பட்ட நாளே (1966, நவ. 16) தேசிய பத்திரிகை நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி நாடு முழுவதும் உள்ள பத்திரிகையாளர்களுக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
இதையும் படிப்போம்|மக்கள்தொகை கணக்கெடுப்புக்கே பாஜக ஏன் பயப்படுகிறது? - திக்விஜய் சிங்
தேசிய தேசிய பத்திரிகை நாளில், உண்மை மற்றும் பொறுப்புணர்வை நிலைநிறுத்தும் பத்திரிகையாளர்களின் இடைவிடாத முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம், மதிக்கிறோம்.
அதிகரித்து வரும் சகிப்பின்மையின் சகாப்தத்துக்கு மத்தியில், அவர்களது தைரியமே ஜனநாயகத்தின் கடைசி பாதுகாப்பு அரணாக உள்ளது. பயம் அல்லது சார்புகளின்றி பத்திரிகைத் துறை செழிக்க வேண்டும். நமது ஜனாயகத்தைக் காக்கும் குரல்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.