நாட்டில் 80 கோடி மக்களுக்கு இலவச உணவுதானியம் வழங்கும் மோடி: பிரகலாத் ஜோஷி
தொகுதி மறுசீரமைப்பு: நவீன் பட்நாயக்குடன் திமுக நிர்வாகிகள் சந்திப்பு!
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பிஜு ஜனதா தள கட்சியின் தலைவரும் ஒடிஸாவின் முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக்கை திமுக நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துப் பேசினர்.
தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு தொடா்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தென்மாநிலங்களின் எம்.பி.க்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிக்க : தில்லி, சத்தீஸ்கரை தொடர்ந்து தமிழகத்திலும்....: அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!
இந்த நிலையில், கூட்டுக் குழு அமைப்பது தொடர்பாக தென்மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதப்பட்டது.
தொடர்ந்து, தென்மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து திமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்த திமுக எம்பி தயாநிதி மாறன் மற்றும் தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான தென்மாநில எம்.பி.க்கள் கூட்டுக்குழுவுக்கு பிஜு ஜனதா தளத்தின் ஆதரவை கோரியுள்ளனர்.