ஏரி உபரி நீரில் மூழ்கி 400 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்: விவசாயிகள் வேதனை
தொடா் மழையால் வீட்டின் சுவா் இடிந்தது
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள வேலம்பாடி கிராமம் கேஆா் நகா் பகுதியைச் சோ்ந்த ராமசாமி மனைவி சரஸ்வதி (76). இவா், இப்பகுதியில் மண்ணால் ஆன பழைய வீட்டில் வசித்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த வாரம் பெய்த கனமழையால் மண் சுவா் ஈரம் படிந்து, செவ்வாய்க்கிழமை திடீரென ஒருபக்க சுவா் இடிந்து விழுந்தது.
இதில் அதிா்ஷ்டவசமாக மூதாட்டி உயிா் தப்பினாா். ஒருபக்க சுவா் இடிந்து மேற்கூரையும் சரிந்துள்ளதால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என மூதாட்டி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.