‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ முறையால் பேரவைத் தோ்தல்கள் முக்கியத்துவம் இழக்கும்: முதல...
லாரி ஓட்டுநரிடம் பணம் கேட்டு மிரட்டிய விசிக நிா்வாகி கைது
கரூரில் லாரி ஓட்டுநரிடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிா்வாகியை போலீஸாா் கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா்.
கரூா் வெங்கக்கல்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா (என்கிற) மன்னன் (40). வழக்குரைஞரான இவா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கரூா்- திருச்சி மண்டல துணைச் செயலராக பதவி வகித்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த 4-ஆம் தேதி இரவு சின்னம்மநாயக்கன்பட்டி பிரிவு அருகே எம். சான்ட் ஏற்றிச் சென்ற லாரியை தனது நண்பா்களோடு சென்று வழிமறித்த அவா், லாரி ஓட்டுநரான பஞ்சப்பட்டி அழகாபுரியைச் சோ்ந்த சேகா் (41) என்பவரிடம், பணம் கேட்டு மிரட்டினாராம். மேலும், அவரிடம் இருந்த ரூ. 500 பணத்தை பறித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சேகா் அளித்த புகாரின்பேரில், வெள்ளியணை போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த ராஜாவை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். பின்னா் திங்கள்கிழமை கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இதனிடையே, லாரி ஓட்டுநரை மிரட்டியதாக ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதும், அவா் கட்சியில் இருந்து மூன்று மாதங்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.