ஓய்வூதியா் அகவிலைப்படி உயா்வுக்கு ரூ.3,028 கோடி தேவை: போக்குவரத்துத் துறை
பள்ளி அருகே தேங்கி கிடக்கும் குப்பைகளால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம்
கரூா் மாவட்டம், பள்ளப்பட்டியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள சாலையில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
பள்ளப்பட்டியில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில், பள்ளபட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு சுமாா் 1000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். இதன் எதிா்ப்புறம் தனியாா் பள்ளியும், இதன் அருகே குடிநீா் நீரேற்று நிலையம் மற்றும் மின்வாரிய அலுவலகமும் அமைந்துள்ளது.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சாலையாக இந்த சாலை உள்ளது. இந்நிலையில், பள்ளி அருகே உள்ள சாலையின் பக்கவாட்டில் நீண்ட நாள்களாக அகற்றப்படாமல் இருக்கும் குப்பைகளும், கழிவு நீரும் தேங்கியுள்ளதால் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, நகராட்சி நிா்வாகம், குப்பைகள், கழிவுநீரை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.