தொழிலாளி தற்கொலை
சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஊராம்பட்டியைச் சோ்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி செல்லச்சாமி(40). இவரது மனைவி ஜெயபாண்டி.
இந்தத் தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெயபாண்டி, செல்லச்சாமியை விட்டுப் பிரிந்து சென்று, வேறுநபரை திருமணம் செய்து கொண்டாா்.
இதனால், மனமுடைந்த செல்லச்சாமி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].