செய்திகள் :

தோழியின் கணவருக்குக் கத்திக்குத்து; போதையில் திமுக நிர்வாகி வெறிச் செயல்; வைரலாகும் வீடியோ

post image

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே மலைப்பாளையம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக இருந்து வந்தவர் தி.மு.க-வைச் சேர்ந்த தேவராஜ். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மனைவி ஜான்சிராணியும் பழகி வந்துள்ளனர். இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்னர் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது ஆதரவாளர்களுடன் ஜான்சிராணியின் வீட்டுக்குள் மது போதையில் சென்ற தேவராஜ் அங்கு இருந்த ஜான்சிராணியின் கணவரான செல்வராஜிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்வராஜின் காது மற்றும் கை பகுதிகளில் குத்தியுள்ளார். இதைக் கண்டு அருகிலிருந்த உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அவர்களைத் தடுக்க முற்பட்டபோது செல்வராஜின் அண்ணியையும் தேவராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர்.

தேவராஜ்
தேவராஜ்

தர்ம அடி கொடுத்த மக்கள்

இதனால், ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள் மற்றும் செல்வராஜின் உறவினர்கள் தேவராஜ் மற்றும் அவர் உடன் வந்தவர்களைக் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். இதுதொடர்பாக செல்வராஜ் அளித்த புகாரின் பேரில், தேவராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சுரேஷ்குமார், பிரபு, நந்த குமார், தமிழ்ச்செல்வன் என ஐந்து பேர் மீது வன்கொடுமை உட்பட 7 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதேபோல தேவராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஜான்சிராணியின் கணவர் செல்வராஜ் மற்றும் உறவினர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊர் மக்கள் தேவராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்களைப் பிடித்துத் தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

கேரளா: `நிறமில்லை, ஆங்கிலப் புலமையில்லை...' - கணவர் வீட்டாரின் துன்புறுத்தலால் இளம்பெண் தற்கொலை

கேரளாவில், 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட இளம்பெண் இரண்டு நாள்களுக்கு முன்பு வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், அவரின் நிறம் மற்றும் ஆங்கிலப் புலமையின்மையால் கணவர் வீட்டார் வீட்டாரின் த... மேலும் பார்க்க

மும்பையில் தொடரும் பணமோசடி; 24 சதவீத வட்டிக்கு ஆசைப்பட்டு 100 கோடியை இழந்த 3000 பேர்; பின்னணி என்ன?

மும்பையில் கடந்த வாரம்தான் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் டோரஸ் நகைக்கடை என்ற பெயரில் நகரில் முக்கிய இடங்களில் கடைகளைத் திறந்து பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்தனர். வாரம் 5 முதல் 12... மேலும் பார்க்க

சென்னையில் மீண்டும் துப்பாக்கி சத்தம் - பிரபல ரௌடி `பாம்' சரவணன் சிக்கியது எப்படி?

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் கூலிப்படைத் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, பிரபல ரௌடி நாகேந்திரன், அ... மேலும் பார்க்க

Saif Ali Khan: அதிகாலையில் கொள்ளை முயற்சி; தடுக்க முயன்ற நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக் குத்து!

மும்பையில் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் நடிகை கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டு பாந்த்ரா பங்களாவில் வசித்து வருகிறார். இன்று அதிகாலை 2.30 மணிக்கு நடிகர் சைஃப் அலிகான் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன... மேலும் பார்க்க

சமாதி ஆனாரா கோபன்சுவாமி? - சந்தேகம் கிளப்பும் ஊர்மக்கள், கல்லறையை திறக்க குடும்பத்தினர் எதிர்ப்பு!

கேரள மாநிலம, திருவனந்தபுரம் மாவட்டம், நெய்யாற்றின்கரை ஆறான்மூடு பகுதியைச் சேர்ந்தவர் கோபன் சுவாமி. மணி என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு 3 மகன்கள். மூத்த மகன் இறந்துவிட்ட நிலையில் தற்போது 2 மகன்கள் உள்ளனர... மேலும் பார்க்க

சென்னை: ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை... வடமாநில இளைஞர் கைது

சென்னை ஐ.ஐ.டியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவி ஒருவர் பொங்கல் பண்டிகை அன்று கோட்டூர்புரத்தில் உள்ள டீக்கடைக்கு நண்பருடன் சென்றிருக்கிறார். அப்போது அந்த டீக்கடையில் வேலை செய்யும் இளைஞர் ஒருவர் திடீரென மாண... மேலும் பார்க்க