நச்சுத் தன்மையுள்ள கடல்மீன் கடித்த மீனவருக்கு சிகிச்சை!
வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்துக்கு அப்பால் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, நச்சுத் தன்மையுடைய மீன் கடித்த மீனவர் ஒருவர் மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார்(35) உள்ளிட்ட ஐந்து மீனவர்கள் ஒரு படகில் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் சென்றனர்.
இவர்கள், கோடியக்கரைக்கு அப்பால் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வலையில் சிக்கிய 'சொறி' என்ற மீன் ராஜ்குமாரைக் கடித்துள்ளது.
இதையும் படிக்க: சன்னி லியோனுக்கு ரூ.1000 மகளிர் உதவித் தொகையா?
மயக்கமடைந்த மீனவருக்கு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆழ்கடல் பகுதியில் காணப்படும் சொறி என்ற ஒரு வகையான கடல் உயிரினம் காணப்படுகிறது. நச்சுத்தன்மை அதிகம் உடைய சொறி மீன்கள் கடித்தாலோ அல்லது முள்ளால் குத்தினாலும் சிலரது உடலுக்கு ஒவ்வாமை அதிகரித்து உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.