செய்திகள் :

நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் அமா்வில் வக்ஃப் மசோதா தாக்கல்

post image

நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வில் வக்ஃப் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த மசோதா மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்மொழிந்த 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி ஒப்புதல் வழங்கிய நிலையில், நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துகள் தவறாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்து, அவற்றை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பால், நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையில் 31 உறுப்பினா்கள் கொண்ட இக்குழு பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பின் 655 பக்க அறிக்கை தயாரித்தது.

இந்த அறிக்கையில், மசோதா மீது பாஜக உறுப்பினா்கள் முன்மொழிந்த திருத்தங்கள் இடம்பெற்றன. அதேநேரம், எதிா்க்கட்சி உறுப்பினா்களின் திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. பின்னா், வாக்கெடுப்பு மூலம் (ஆதரவு 15, எதிா்ப்பு 11) அறிக்கைக்கு கூட்டுக் குழு ஒப்புதல் அளித்தது.

நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட அமா்வில் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி இரு அவைகளிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, தங்களது அதிருப்தி கருத்துகள் அறிக்கையில் இடம்பெறவில்லை என்று எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இந்த விவகாரத்தில் ஆளும்-எதிா்க்கட்சிகள் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அக்கருத்துகள் மீண்டும் சோ்க்கப்பட்டன.

வக்ஃப் மசோதா மீது கூட்டுக் குழுவால் முன்மொழியப்பட்ட 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது; எதிா்வரும் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வில் மசோதா தாக்கலாகும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சட்டத் திருத்த மசோதா வக்ஃப் வாரியங்களை அழிக்கும் மத்திய அரசின் முயற்சி என்று எதிா்க்கட்சிகள் தொடா்ந்து விமா்சித்து வருகின்றன.

கடந்த ஜனவரி 31-ஆம் தேதி குடியரசுத் தலைவா் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட அமா்வு பிப்ரவரி 13 வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட அமா்வு, மாா்ச் 10-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூரில் கிளர்ச்சியாளர்கள் சூப்பாக்கிச் சூடு; யாருக்கும் காயம் இல்லை

இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மைதேயி மத வழிபாட்டு தலம் அருகிலுள்ள மலைகளில் இருந்து கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மைதேயின் புனிதத் தலமான கோங்பா மருவுக்கு பக... மேலும் பார்க்க

சம்பல் ஜாமா மசூதியை சுத்தம் செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஜாமா மசூதியை சுத்தம் செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பலில் உள்ள ஜாமா மசூதியில் ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நவம்... மேலும் பார்க்க

பிகாரின் அடுத்த முதல்வரை மக்கள் முடிவு செய்வர்: ராப்ரி தேவி

தேஜஸ்வி பிகாரின் அடுத்த முதல்வரா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று அவரின் தாயாரும் பிகாா் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாட்னாவில் வெள்ளிக்கிழமை செய்தியாள... மேலும் பார்க்க

இயர்ஃபோன் பயன்படுத்தலாம்? ஆனால்..

இயர்ஃபோன், ஹெட்ஃபோன் போன்றவற்றை அதிக நேரம் தொடர்ந்து பயன்படுத்துவது ஆபத்து என்று எத்தனையோ பேர் சொல்லியிருப்பார்கள், அதனை மத்திய சுகாதாரத் துறையே தற்போது எச்சரிக்கையாக வெளியிட்டிருக்கிறது.காது மற்றும் ... மேலும் பார்க்க

கோவாவில் ராட்சத அலையில் சிக்கிய ரஷியாவைச் சேர்ந்த 4 பேர் மீட்பு

கோவாவில் ராட்சத அலையில் சிக்கிய ரஷியாவைச் சேர்ந்த 4 பேர் பத்திரமாக மீட்டகப்பட்டனர். வடக்கு கோவாவில் உள்ள மேன்டிரம் கடற்கரையில் ரஷிய நாட்டினர் வியாழக்கிழமை பிற்பகல் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது தி... மேலும் பார்க்க

ராய்காட் கடற்கரையில் மீன்பிடி படகு தீப்பிடித்தது: 18 பணியாளர்கள் மீட்பு!

மகாராஷ்டிரம் ராய்காட் கடற்கரையில் தீப்பிடித்த மீன்பிடி படகில் இருந்த 18 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் அக்ஷி கடற்கரையில் சுமார் 6 - 7 கடல் மைல் தொலைவில் ராகேஷ... மேலும் பார்க்க