கோலியைப் பின்னுக்குத் தள்ளிய 21-ம் நூற்றாண்டின் அதிவேக வீராங்கனை; 37 வருட சாதனைய...
நடிகை மனோரமாவின் மகன் பூபதி காலமானார்
நடிகை மனோரமாவின் மகன் பூபதி மூச்சு திணறல் காரணமாக இன்று (அக்.23) காலை காலமானார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்தவர் மனோரமா. குணச்சித்திர கதாபாத்திரங்கள், நகைச்சுவை கதாபாத்திரங்கள் என பல படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு காலமானார்.

இவரது ஒரே மகன் பூபதி (70). மூச்சு திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை உயிரிழந்திருக்கிறார்.
அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விசுவின் 'குடும்பம் ஒரு கதம்பம்' படத்தில் அறிமுகமான பூபதி, அதன் பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். மகனுக்காக 'தூரத்து பச்சை' என்ற படத்தையும் மனோரமா தயாரித்தார். ஆனால் அது கைக்கொடுக்கவில்லை.

சீரியல்கள் சிலவற்றிலும் பூபதி நடித்தார். பூபதிக்கு ராஜராஜன் என மகனும், அபிராமி, மீனாட்சி என்ற மகள்களும் உள்ளனர். அவரின் இறுதி சடங்கு நாளை (24.10.2025) மதியம் 3 மணிக்கு மேல் கண்ணம்மா பேட்டை மயானத்தில் நடைபெறும்.