செய்திகள் :

``நடிக்கும் போது நோட்டை கொடுப்போம்; நடிப்பை நிறுத்தினால் நாட்டை கொடுப்போம்'' - சீமான் விமர்சனம்

post image

மருது பாண்டியர்கள் 224-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களை சந்தித்தார்.

 சீமான், விஜய்
சீமான், விஜய்

"கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விஜய்யை பார்க்க செல்கிறார்கள் இந்த அரசியலை எப்படி பார்க்கிறீர்கள்?" என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,

"கல்வி அரசியலை கற்பிக்கவில்லை. ஒழுக்க நெறிமுறைகளை கற்றுத்தரும் கல்வியாக இல்லாமல், வியாபாரமாக மாறிவிட்டது. கலையைப் போற்றலாம், கலைஞர்களைப் பாராட்டலாம். ஆனால் நடித்தால் மட்டுமே நாடாளும் தகுதி வந்துவிடும் என்று நாட்டு மக்கள் எண்ணுகிறார்களோ அதுதான் கொடுமையான போக்கு.

போகப்போக ஒரு சமூகம் வளர்ந்து வாழும் என்றுதான் பார்க்கிறோம். ஒப்பனையை அளித்த உடனே அரியணையும் அளிக்கிறோம்.

நடிக்கும்போதும் நோட்டை கொடுப்போம் வாழ்வதற்கு; நடிப்பதை நிறுத்தினால் நாட்டை கொடுப்போம் ஆள்வதற்கு இந்த நிலைப்பாட்டை தமிழ் சமூகம் ஏற்கிறதா?

சீமான்
சீமான்

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், திரை கவர்ச்சியில் மூழ்கியிருக்கும் தமிழ் இனம் விழிப்புற்று எழவேண்டும். தோற்றுப்போன சமூகத்தில் தேவையற்ற செய்திகளை தலைப்புச் செய்திகளாக மாற்ற வேண்டாம்" என்றார்.

சீமான் பேசிக் கொண்டிருந்தபோது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மருது பாண்டியர் சிலைக்கு மாலை அணிவதற்காக வருகை தந்ததால் செய்தியாளர் சந்திப்பை முடிக்குமாறு காவல்துறை கூறியதால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

"நாளைக்கு என்னாகும் தெரியாது" - பொடி வைத்த ஜோடங்கர் - காங்கிரஸ் கணக்கு என்ன?

விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜா சொக்கரின் இல்லத் திருமண விழா, அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று(அக்.27-ம் தேதி) நடைபெற்றது. அவ்விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "திமுக-வும் கா... மேலும் பார்க்க

புதுவை: பெண்களுக்கு Night Shift தடை: "பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என அரசு ஒப்புக்கொள்கிறதா?"- திமுக

பெண்களை இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை தொழிற்சாலைகளில் பணியில் ஈடுபடுத்துவதற்குத் தடை விதித்து புதுச்சேரி தொழிலாளர் துறை அரசாணை வெளியிட்டிருக்கிறது. அதுகுறித்துப் பேசியிருக்கும் புதுச்சேரி தி... மேலும் பார்க்க

கோவையில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா!

குடியரசு துணைத் தலைவரை வரவேற்ற தமிழக அமைச்சர்கள் குடியரசு துணைத் தலைவரை வரவேற்ற பொதுமக்கள்குடியரசு துணைத் தலைவரை வாழ்த்திய அதிமுகவை சேர்ந்த வேலுமணி குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்கோயம்புத்த... மேலும் பார்க்க

'தேர்தல் தோல்வி... பிரதமரிடம் இருந்து வந்த அழைப்பு..' - மனம் திறந்த சி.பி.ராதாகிருஷ்ணன்

சி.பி. ராதாகிருஷ்ணன் நாட்டின் குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்ற பிறகு முதல்முறையாக இன்று தமிழ்நாடு வந்தார். இன்று காலை கோவை வந்த அவருக்கு தொழில் அமைப்புகள் சார்பில் கொடிசியா அரங்கில் பாராட்டு விழா ந... மேலும் பார்க்க

'மீண்டும் திமுக ஆட்சிக்கு வாய்ப்பு' - ஓபிஎஸ்-ஸின் கருத்து வியூகமா? குழப்பமா?

அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, தன் அரசியல் பயணத்தை 'அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு' மூலம் தனித்துத் தொடங்கினார், ஓ.பி.எஸ். பா.ஜ.க தலைமையிலான தே.ஜ கூட்டணியில் இணைந்தார். எனினும், க... மேலும் பார்க்க