செய்திகள் :

நடிக்க வரும் முன்பே வில்லங்கம், வெளிநாட்டு ரசிகையுடன் காதல் - அர்னவைத் தொடரும் சர்ச்சைகள்

post image
பிக்பாஸ் சீசன் 8 ல் இரண்டாவது வார எவிக்‌ஷன் நிகழ்ந்து அர்னவ் வெளியேற்றப்பட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் போது, 'உங்களுக்கு ஏதாவது நல்லது நடந்ததுன்னா, வாயாலேயே அதைக் கெடுத்துடாதீங்க' என விஜய் சேதுபதியிடமிருந்து அட்வைஸ் வாங்கிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்ஷிதா

இந்நிலையில், நேற்று வெளியேறிய போதும், சக போட்டியாளர்களை அர்னவ் கமென்ட் செய்த விதம் குறித்து கடிந்து கொண்டார் விஜய் சேதுபதி.

அர்னவ் -அன்ஷிதா இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற போது, 'சீரியலில் சேர்ந்து நடித்த ஜோடி', நடித்த போது  'கான்ட்ரவரிசியில் சிக்கியவர்கள்' எனவே எப்படியும் ரெண்டு பேரும் அவ்வளவு சீக்கிரத்தில் வெளியேற மாட்டாங்க' என்றெல்லாம் பிக் பாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதற்கேற்ப `சொம்பு துாக்கி' என்ற பட்டத்தை அர்னவே அன்ஷிதாவுக்கு வழங்க, அதற்கு அன்ஷிதா, ``என் பெஸ்ட் ப்ரண்ட் நீயே இப்படி பண்ணிருக்ககூடாது" என அழுததும் வைரலானது. இந்நிலையில் திடீரென அர்னவ் வெளியேறியதில் அன்ஷிதா வருத்தப்பட்டார்.

மனைவியுடன் சர்ச்சை, ஜெயில் என சமூக வலைதளங்களில் வைரலானவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து இரண்டாவது வாரத்திலேயே வெளியேற்றப்பட்டிருக்கிறார். வெளியேறினார் என்பதைத் தாண்டி அவர் பேசிய விதத்தை விஜய் சேதுபதி தொடர்ந்து கண்டித்து வந்ததுதான் முக்கிய பேசுபொருளானது. அன்ஷிதாவோ, அவன் மிக நல்லவன் என்றெல்லாம் பேசினார். அறிமுக எபிசோடில் 'ஆம்பள இல்ல, விடுவோமா' எனத் தொடங்கி எவிக்டான பின், சக ஹவுஸ் மேட்ஸை வில்லங்கமாகப் பேச `வாய்ப்பு தந்தேன்றதுக்காக... வன்மத்தைக் கக்கக்கூடாது.' என வி.சே விடம் திட்டுவாங்கி என அர்னவ் ஏன் இப்படி நடந்து கொண்டார் என அர்னவிற்கு நெருக்கமான நண்பர்களிடம் பேசினோம்.

``சொந்த ஊர் அறந்தாங்கி. அங்க அவருடைய அப்பா வெயிட்டான பிசினஸ் புள்ளி. அதனால் அங்க இருக்கும் போதே, உள்ளூர்ல ஜெராக்ஸ் கடை வைத்திருந்த ஒரு பெண்ணிடம் பழகியது சர்ச்சையானது. சென்னைக்கு வந்தப்பதான் பெற்றோர் வச்சிருந்த பெயரை மாத்தி அர்னவ்னு வச்சுக்கிட்டார்னு சொல்றாங்க.

சென்னையில் மாடலிங் வாய்ப்பு தேடி அலைந்தார். சில வாய்ப்புகள் வர, அங்கிருந்து அப்படியே டிவிக்கும் வந்தார். டிவி கொஞ்சம் புகழ் தரத் தொடங்கியது. அந்தப்  புகழை ராங் ரூட்டில் பயன்படுத்தத் தொடங்கி விட்டார். அதாவது ரசிகைகள், நட்பாக வரும் உடன் நடிக்கும் நடிகைகளில் பொருளாதார ரீதியில் வெயிட்டாக இருப்பவர்களிடம் உடனே ஒட்டிக் கொண்டு விடுவார்ங்கிறதை அவரு கூடப் பழகிய யாரைக் கேட்டாலும் சொல்வாங்க.

அர்னவ் திவ்யா

தெளிவாச் சொல்லணும்னா, பழகுறவங்க இவருக்குச் செலவு செய்யணும். இவருக்காக நிறைய செலவழித்த வெளிநாட்டு ரசிகை ஒருவர் கல்யாணம் செய்யச் சொல்லி அடம்பிடிக்க வேறு வழியில்லாமல் அவரைத் திருமணம் செய்து கொண்டு அந்த நாட்டிலேயே சில நாள் இருந்தார். ஆனா அந்த வாழ்க்கை போயிக் கொண்டிருந்தபோதே, அங்கேயே இன்னொருடன் பழக, கல்யாணம் செய்த ரசிகை இவருடைய சொந்த ஊர் வரை சென்று பெரிய பஞ்சாயத்தானது. இந்த விவரங்களையெல்லாம் திவ்யா கேஸ் விவகாரத்தின் போது ஆதாரமாகவே அவர் திரட்டிக் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திவ்யாவுடனும் முதலில் லிவ் இன் வாழ்க்கையிலேயேதான் இருந்தார். இவருடைய கடந்த காலம் குறித்துக் கொஞ்சம் லேட்டாகவே தெரிந்து கொண்ட திவ்யா தங்களுக்குத் திருமணம்  நடந்த விஷயத்தை அவரே வெளியில் சொல்ல, அதனாலேயே திவ்யா ஆகாதவராகப் போனார்.

இதற்கிடையில் கேரளாவில் பல் மருத்துவராக இருக்கும் ஒரு பெண்ணுடனும் தொடர்பு ஏற்பட்டு, அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதை அனைவரும் கேட்டிருப்போம்.

திவ்யா உடன் வாழ்ந்து கொண்டிருந்த போதே அன்ஷிதாவுடன் பழகத் தொடங்கியதுலதான் பிரச்னை பெரிதாகி மீடியாவுக்கு வந்து, கடைசியில ஜெயிலுக்குப் போய் வந்தார்.

அர்னவ் - அன்ஷிதா

ஆனா இப்பக் கூட மனுஷன் என்ன தைரியம்னு தெரியலை அலட்டிக்கவே மாட்டேங்குறார். விஜய் சேதுபதி முன்னிலையில் 'ஆம்பளல்ல' எனப் பேசிய மாதிரியே திவ்யாவிடம் 'நான் நாலு பேர் கூட வாழ்வேன், உன்னால் என்ன செய்ய முடியுமென' கூடக் கேட்டிருக்கார்.

ஆனா இதுக்கு முன்னாடி எப்படியோ, இப்ப பிக்பாஸ் போனது அவருடைய லைஃப்ல  போதாத காலம்தான்னு நினைக்கிறோம். ஏன்னா அந்த வீட்டுக்குள்ள பெரிசா எதையும் பண்ணலை. கெட்ட பேரும் வந்திடுச்சு. எல்லாத்துக்கும் மேல ரெண்டாவது வாரத்துலயே எவிக்ட்டும் ஆயாச்சு,

மொத்தத்துல 'பருத்தி மூட்டை குடோனலயே இருந்திருக்கலாம்' டயலாக் மாதிரி இவர் பிக்பாஸ் போகாமலே இருந்திருக்கலாம்' என்கின்றனர் இவர்கள்.

`சீதாவுக்குப் பதில் சுஜிதா' - சமையல் நிகழ்ச்சியில் நடத்த மாற்றத்தின் பின்னணி என்ன?

ஜீ தமிழ் சேனலில் சில தினங்களுக்கு முன் தொடங்கிய 'கிச்சன் எக்ஸ்பிரஸ்' நிகழ்ச்சியிலிருந்து நடிகை சீதா வெளியேறியிருக்கிறார். அவருக்குப் பதில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முதல் சீசனில் நடித்த நடிகை சுஜிதா கமிட் ... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 8: ஆரம்பமான அடுத்த நாமினேஷன்; அணி மாறும் சாச்சனா, ஜெஃப்ரி; அடுத்து என்ன நடக்கும்?

பிக் பாஸ் தமிழ் சீசன் 8-ன் இன்றைய நாளுக்கான இரண்டு புரோமோக்கள் வெளியாகி இருக்கின்றன.பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி தொடக்கப்பட்டு இரண்டு வாரம் முடிவடைந்து இருக்கிறது. இதில் முதல் வாரத்தில் ரவீந்... மேலும் பார்க்க

BB Tamil Day 14: சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்ட தர்ஷா; விசே உசுப்பி விட்டதால் சூடான அர்னவ்

இரண்டு வாரங்கள் முடிந்த நிலையில், அர்னவ் வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில், போட்டியாளர்கள் எந்த மாதிரியான தர வரிசையில் இருக்கிறார்கள் என்பதை ஒரு உத்தேசமான கணிப்பாக பார்த்து விடுவோம். ஆண்கள், பெண்கள் என்... மேலும் பார்க்க

Bigg Boss: ஜாக்குலின், தர்ஷாவை கடிந்துகொண்ட விஜய் சேதுபதி - இன்றைய எபிசோடில் என்ன நடக்கப் போகிறது?

பிக் பாஸ் சீசன் 8-ன் இன்றைய நாளுக்கான இரண்டு ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது.நேற்றைய எபிசோடில் வழக்கம்போல விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் பல கேள்விகளை எழுப்பி விசாரித்தார். குறிப்பாக, சம்மந்தி பஞ்சாயத... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 13: சாச்சனாவின் ‘உணவு’ பிரச்னை; ஆட்டத்தில் அநாவசியமாக மூக்கை நுழைக்கிறாரா விசே?

பிக் பாஸ் சீசனுக்கும் முட்டைக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். ஒவ்வொரு சீசனிலும் முட்டை தொடர்பான சர்ச்சைகள் உத்தரவாதமாக வெடிக்கும். இந்த எட்டாவது சீசனும் அதற்கு விதிவிலக்கல்ல. எனவே இங்கும் வெடித்தது. உ... மேலும் பார்க்க