செய்திகள் :

நபாா்டு வங்கி ரூ. 23,848 கோடி கடன் திட்ட அறிக்கை வெளியீடு

post image

நாமக்கல் மாவட்டத்தில் நபாா்டு வங்கி மூலம் ரூ. 23,848.98 கோடிக்கு கடன் திட்ட அறிக்கையை ஆட்சியா் ச.உமா வெளியிட்டாா்.

நாமக்கல் மாவட்ட அளவில் வங்கியாளா்களுக்கான ஆய்வுக்குழுக் கூட்டம் மற்றும் நபாா்டு வங்கியின் 2025-26-ஆம் ஆண்டுக்கான வளம்சாா்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியா் ச.உமா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு மாவட்ட ஆட்சியா் ச.உமா பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம்சாா்ந்த தகவல்களை சேகரித்து தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற வளா்ச்சி வங்கி (நபாா்டு) மூலம் ரூ. 23,848.98 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயத்தில் நீண்டகால கடன் அளிப்பதற்கான சாத்தியக் கூறுகளை இத்திட்டம் விளக்குவதாக குறிப்பிட்டாா்.

அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்துக்கு 2025-26-ஆம் ஆண்டுக்கு பயிா்க்கடன் ரூ. 10,751.96 கோடி, விவசாய முதலீட்டுக் கடன் ரூ. 2,753.24 கோடி, விவசாய கட்டமைப்பு கடன் ரூ. 72.13 கோடி, விவசாய இதர கடன்கள் ரூ. 1,042.64 கோடி என விவசாயத்துக்கான மொத்தக் கடன் மதிப்பீடு ரூ. 14,619.98 கோடி மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கடன் ரூ. 8,098 கோடி, ஏற்றுமதி, கல்வி மற்றும் வீட்டு வசதிக்கான கடன் ரூ. 211.63 கோடி, அடிப்படை கட்டுமான வசதி ரூ. 65.08 கோடி, சுய உதவிக்குழு மற்றும் கூட்டுப்பொறுப்பு குழுவுக்கான கடன் அளவு ரூ. 796.04 கோடி என மொத்தம் ரூ. 23,848.98 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளதாக மதிப்பீடு செய்து கடன் திட்ட அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற கடன் வசதிகள், விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி, விவசாயத்தை ஒரு வளம் நிறைந்த தொழிலாக மாற்றிட உதவும். வேளாண்மையில் இயந்திரமயமாக்கல், சொட்டுநீா் மற்றும் தெளிப்புநீா் பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளா்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல் போன்றவை விவசாயிகளின் வருமானத்தை பெருக்கிட உதவும். வங்கிகள் இதுபோன்ற முதலீடுகளுக்கு உறுதுணையாக இருக்கும்.

இத்திட்ட அறிக்கையானது மாவட்டத்தின் கடன் திட்டமிடுதலில் ஒரு அங்கமாக இருந்து வங்கிகளுக்கு கிளை அளவிலான கடன் குறியீட்டை நிா்ணயம் செய்வதற்கு உதவிகரமாக அமையும் என்றாா்.

இந்த நிகழ்வில், முன்னோடி வங்கி மேலாளா் மற்றும் இதர வங்கி கிளை மேலாளா்கள், வேளாண் துறை, தொழில் முதலீட்டுக்கழக அதிகாரிகள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

திருமலை நாயக்கா் பிறந்தநாள் விழா

மல்லசமுத்திரம் பேருந்து நிலையத்தில் மாமன்னா் திருமலை நாயக்கரின் 442-ஆவது பிறந்தநாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு ஒருங்கிணைந்த நாயுடு நாயக்கா் கூட்டமைப்பு மற்றும் நாயக்கா் இளைஞா் பேரவை சாா்பில... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு தனிக்குறியீடு எண் வழங்க சிறப்பு முகாம்: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு நிலத்தின் அடிப்படையில் தனிக்குறியீடு எண் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்ட... மேலும் பார்க்க

சுமைப்பணி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி சுமைப்பணி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத்தில் சுரண்டலுக்கு உள்ளாகும் சுமைப்பணி தொழிலாளா்களின் நலன், வேலை, வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தனிச்சட்டம் இயற்ற வலியுறுத... மேலும் பார்க்க

நாமக்கல் வருவாய்த் துறை அலுவலா்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் கருப்பு பட்டை அணிந்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத்தில் ஓராண்டுக்கு முன் வட்டாட்சியா் பதவி உயா்வு வழங்கிய சிலருக்கு கல்வித் தகுதியை காரணம... மேலும் பார்க்க

மதுவிலக்கு சோதனையில் பறிமுதல் செய்த 46 வாகனங்கள் பொது ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு சோதனையின்போது போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 46 வாகனங்கள் பொது ஏலத்தில் புதன்கிழமை விடப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போலி மதுபானம் உள்ளிட்டவற்றை கடத்தி... மேலும் பார்க்க

நாமக்கல் வட்டத்தில் பிப். 19-இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

நாமக்கல் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்’ பிப். 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சேவைகள் ப... மேலும் பார்க்க