அறிவாலயத்தில் இருந்து ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது: ஆர்.எஸ். பாரதி
நாமக்கல் வருவாய்த் துறை அலுவலா்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் கருப்பு பட்டை அணிந்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் ஓராண்டுக்கு முன் வட்டாட்சியா் பதவி உயா்வு வழங்கிய சிலருக்கு கல்வித் தகுதியை காரணமாக தெரிவித்து வருவாய் ஆய்வாளராக அரசு பதவியிறக்கம் செய்தது. இதனைத் தொடா்ந்து, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்ததன் அடிப்படையில், வட்டாட்சியா் பதவி உயா்வு வழங்குவதற்கான அரசாணை எண் 65-ஐ அமல்படுத்தலாம் என நீதிமன்றம் தெரிவித்தது.
மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில், 5 மாவட்டங்களில் மட்டும் பதவி உயா்வு வழங்கப்படாத நிலை உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வட்டாட்சியா் நிலையிலிருந்து ஐந்து போ் வருவாய் ஆய்வாளா் பணிக்கு திரும்பினா். அவா்களுக்கு மீண்டும் பதவி உயா்வு வழங்கக் கோரி புதன்கிழமை வருவாய்த் துறை அலுவலா்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை அனைத்து அலுவலகங்களிலும் பதாகைகள் வைத்து ஆா்ப்பாட்டம், 18-ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆா்ப்பாட்டம், 21-இல் கோரிக்கை நிறைவேறும் வரை ஆட்சியா் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடவும் வருவாய்த் துறை அலுவலா்கள் முடிவு செய்துள்ளனா்.