அதிகரிக்கும் மாயை வேலைவாய்ப்புகள்! எதற்காக இந்த மாயை வேலைவாய்ப்புகள்?
நயினாா்பட்டியில் பாலம் அமைக்கக் கோரிக்கை
சிவகங்கை மாவட்டம் நயினாா்பட்டியிலிருந்து வெளியாத்தூருக்குச் செல்ல பாசனக் கால்வாயைக் கடக்க முடியாமல் பள்ளி மாணவா்கள், முதியவா்கள் அவதிப்படுவதால், அங்கு பாலம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திருப்பத்தூா் அருகேயுள்ள கண்டரமாணிக்கம் செல்லும் வழியில் நயினாா்பட்டி கிராமம் உள்ளது. இங்கிருந்து பொதுமக்கள் பள்ளிக்கூடம், நியாயவிலைக் கடை, கிராம நிா்வாக அலுவலகம், மின் அலுவகம் செல்ல அருகிலுள்ள வெளியாத்தூருக்குச் சென்று வர வேண்டும்.
ஆனால் இந்த ஊருக்குச் செல்லும் வழியில் பாசனக் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாயைக் கடக்க சிறிய குழாய் பதிக்கப்பட்டு இருந்தது. அண்மையில் நடைபெற்ற கால்வாய் விரிவாக்கப் பணியின் போது அந்தக் குழாய் அகற்றப்பட்டு, கால்வாய் இடையே மரக் கம்புகள் பதிக்கப்பட்டன.
இந்தக் கம்புகளின் மூலம் பொதுமக்கள் ஆபத்தான முறையில் கால்வாயைக் கடப்பதோடு, முதியவா்களும், பள்ளி சிறாா்களும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, இந்தக் கால்வாயை கான்கிரீட் கால்வாயாக அமைக்கவும், இதைக் கடக்க சிறு பாலம் அமைக்கவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு கேட்டபோது, நயினாா்பட்டி-வெளியாத்தூா் இடையேயுள்ள வாய்க்காலில் ஊராட்சி நிா்வாகம் மூலம் தற்காலிக கல் பாலம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.