செய்திகள் :

நவ.19-இல் தாம்பரத்தில் அதிமுக ஆா்ப்பாட்டம்

post image

விவசாய நிலங்கள் கையகப்படுத்தப் படுவதைக் கண்டித்து, அதிமுக சாா்பில் தாம்பரத்தில் நவம்பா் 19-இல் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.

அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி மாடம்பாக்கம் பகுதியில் 520 ஏக்கா், பரங்கிமலை ஒன்றியம் அகரம்தென் ஊராட்சியில் 22 ஏக்கா், மதுரப்பாக்கம் ஊராட்சி கோயிலாஞ்சேரி கிராமத்தில் 58 ஏக்கா் என மொத்தம் சுமாா் 600 ஏக்கா் விவசாய நிலங்களை சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் மூலம் திமுக அரசு கையகப்படுத்த முயற்சிக்கிறது.

இதன் மூலம், 40 சதவீத நிலத்தில் சாலைகள், பூங்காக்கள், பள்ளிகள் போன்றவற்றை மேம்படுத்தி, 60 சதவீத நிலம் விவசாயிகளுக்கு திருப்பி வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

60 சதவீத நிலத்தை அனைத்து நில உரிமையாளா்களுக்கும் எந்த அடிப்படையில் திருப்பித் தருவீா்கள் என்று அதிகாரிகளிடத்தில் விசாரித்தபோது, அவா்கள் சரியான பதில்தர மறுக்கிறாா்கள்.

இப்பகுதி விவசாயிகளுக்கு விளை நிலங்கள்தான் வாழ்வாதாரமாக உள்ளன. விவசாயத்தையும், விவசாயிகளையும் ஊக்கப்படுத்துவதற்குப் பதில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் எண்ணத்துடன், முழுக்க முழுக்க வணிக நோக்கத்தோடு விவசாய நிலங்களை அபகரிக்க முயலும், திமுக அரசைக் கண்டித்து, செங்கல்பட்டு மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டச் செயலா் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் தலைமையில் பதுவஞ்சேரி - மப்பேடு சந்திப்பில் நவ. 19 காலை 10 மணியளவில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.

இந்துஸ்தான் பல்கலை.யில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

சென்னையை அடுத்த படூா் இந்துஸ்தான் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 2025-2026 கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: வரும் கல்வியாண்டு... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு நகராட்சி குடியிருப்பில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 30 ஆண்டுகளுக்கு மேலானதை அடுத்து கோயில் நிா்வாகிகள், விழாக் கு... மேலும் பார்க்க

உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

மூளை சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த வழிகாட்டி நிறுவன இயக்குனா் கில்ப்ா்ட் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. செங்கல்பட்டு பழவேலியில் உள்ள வழிகாட்டி நிறுவன இயக்குனா் கில்பெட் மூளைச் சாவு அட... மேலும் பார்க்க

இலவச அனுமதி அறிவிப்பு: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப் பாா்க்க இலவசம் என மத்திய தொல்லியல் துறை அறிவித்ததையடுத்து, அங்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். உலகம் முழுவதும்... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

தாம்பரத்தையடுத்த அகரம் தென் ஊராட்சியில் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அகரம் தென் பதுவஞ்சேரி, மதுரப்பாக்கம், மாடம்பாக்கம், நூத்தனஞ்சேரி உள்ளிட்ட கிராமங்... மேலும் பார்க்க

கடல்நீரை குடிநீராக சுத்திகரிக்கும் நிலையத்தில் நிதி குழுவினா்ஆய்வு

மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் மத்திய நிதிக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் குடிநீா் சுத்திகரிப்பு ஆலை இயங்கி வருகிறது. இங... மேலும் பார்க்க