காலுறுதிக்கு தகுதிபெற்ற குரோசியா..! ரொனால்டோ பங்கேற்காதது ஏன்?
நவ. 24-ல் நாடாளுமன்ற அனைத்துக் கட்சிகள் கூட்டம்!
நாடாளுமன்ற அனைத்துக் கட்சிகள் கூட்டம் வருகின்ற 24ஆம் தேதி நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20 வரை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சிகளின் கூட்டத்துக்கு கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிக்க : குளிர்கால கூட்டத்திலேயே ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல்: கிரண் ரிஜிஜு
நாடாளுமன்ற வளாகத்தில் நவ. 24ஆம் தேதி காலை 11 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குளிர்கால கூட்டத்தொடரில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவும், தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வில் உள்ள வக்ஃப் வாரிய மசோதாவும் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு முக்கிய மசோதாக்களையும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.