செய்திகள் :

நாகர்கோவில், செங்கோட்டை எக்ஸ்பிரஸ் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் - தெற்கு ரயில்வே

post image

சென்னை எழும்பூரிலிருந்து செல்லும் முக்கிய விரைவு ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை(நவ. 18) வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூர் - நாகர்கோவில்(12667), வரும் 21-ஆம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் இரவு 7.30 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.

மறுமார்க்கத்தில், நாகர்கோவில் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்(12668), வரும் 22-ஆம் தேதி முதல் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் அதிகாலை 4.15 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை சென்றடையும்.

அதேபோல, சென்னை எழும்பூர் - செங்கோட்டை(20681), வரும் 20-ஆம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் இரவு 8.55 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.

மறுமார்க்கத்தில், செங்கோட்டை - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்(20682), வரும் 21-ஆம் தேதி முதல் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் அதிகாலை 4.25 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை சென்றடையும்.

சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகளும், பராமரிப்பு பணிகளும் நடைபெறுவதால் மேற்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெர்கு ரயில்வேயின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகரப் பேருந்தில் 20 கிலோ வரை 'லக்கேஜ்' கட்டணமில்லை !

மாநகரப் பேருந்துகளில் 20 கிலோ எடை வரையிலான பொருள்களை கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.பொருள்களுக்கான சுமைக்கட்டணம் குறித்து பயணிகளிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்ட ... மேலும் பார்க்க

சூடுபிடிக்கும் பிக் பாஸ்: செளந்தர்யாவைக் கண்டு அச்சப்படும் முத்துக்குமரன்!

நடிகை செளந்தர்யாவைக் கண்டு முத்துக்குமரன் அஞ்சுவதைப் போன்று பேசுகிறார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் முத்துக்குமரன் மிகுந்த பலமான போட்டி... மேலும் பார்க்க

தண்டனையா? கழிப்பறைக்காக பல மணி நேரம் காத்திருக்கும் வேலூர் சிறைக் கைதிகள்!

வேலூர் மத்திய சிறையில், ஆண்களுக்கான பிரிவில் அடைக்கப்பட்டிருக்கும் சிறைக் கைதிகளுக்கு, சிறைவாழ்வை விட, கழிப்பறைக்காக பல மணி நேரம் காத்திருப்பதுதான் கொடுந்துயரமாக மாறியிருக்கிறது.கழிப்பறையைப் பயன்படுத்... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் டிக்கெட் முன்பதிவு கால வரம்பு 90 நாட்களாக உயர்வு- இன்று முதல் அமல்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இன்று முதல் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக கூறியிருப்பதாவது, பயணிகளி... மேலும் பார்க்க

10 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல ... மேலும் பார்க்க

நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: கடிநெல்வயல் ஊராட்சி மக்கள் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யம் நகராட்சியுடன் கடிநெல்வயல் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பிரதான சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நாகை மாவட்டம், வேதாரண்யம் நகராட்சி அமைப்பை விரிவுபடுத்... மேலும் பார்க்க