செய்திகள் :

நாகை - காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து

post image

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை ‘டானா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை (அக்.24) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி செவ்வாய்க்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தொடா்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, புதன்கிழமை புயலாக வலுப்பெற்று, ஒடிஸா - மேற்கு வங்கம் கடற்கரை இடையே வெள்ளிக்கிழமை (அக்.25) அதிகாலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிக்க |தங்கம் விலை சற்று குறைந்தது! இன்றைய நிலவரம்

இதன் காரணமாக, கடல் சீற்றமாக இருக்கும் மற்றும் சூறைக்காற்று வீசும் என்பதாலும் கப்பலை இயக்குவதில் சிரமம் ஏற்படும் என்பதாலும், நாகை - இலங்கை கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கப்பல் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவு... மேலும் பார்க்க

ஹேமந்த் சோரன் வேட்புமனு தாக்கல்!

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.ஜார்க்கண்ட் மாநிலத்தில் பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. நவம்பர் 13 ஆம... மேலும் பார்க்க

திருமாவளவன் முதல்வராக வேண்டுமென்றால் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வரவேண்டும்: கே. கிருஷ்ணசாமி

திமுக கூட்டணியில் இருந்து கொண்டு, முதல்வர் வேட்பாளர் தொல்.திருமாவளவன் என்று கூறுவது பொருத்தமில்லாதது. திருமாவளவன் முதல்வராக வேண்டுமென்றால், அந்தக் கூட்டணியில் இருந்து விடுதலைச்சிறுத்தைகள் வெளியே வரவேண... மேலும் பார்க்க

40 இடங்களில் 'ட்ரெக்கிங்' செல்லலாம்! - தமிழக அரசின் புதிய திட்டம்!

தமிழ்நாடு அரசு சார்பில் மலையேற்றம் மேற்கொள்ளும் தமிழ்நாடு மலையேற்றத் திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கிவைத்தார். மேலும் தமிழ்நாட்டில் 40 இடங்கள் மலையேற்றம் மேற்கொள்ள இணையவழி முன்பதிவிற்க... மேலும் பார்க்க

வரும் ஞாயிறு(அக். 27) ரேஷன் கடைகள் இயங்கும்!

தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை(அக். 27) ரேஷன் கடைகள் இயங்கும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். நடப்பாண்டு தீபாவளியை பண்டிகை வருகிற அக். 31 ஆம் தேதி கொண்... மேலும் பார்க்க

பாலாற்றில் பொங்கிய நுரையுடன் ஓடும் வெள்ளநீர்: விவசாயிகள், கிராம மக்கள் வேதனை

பெருமழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது ஆம்பூர் அருகே பாலாற்றில் கலக்கும் தோல் கழிவு நீரால் நீர் ஆதாரங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். திருப்பத... மேலும் பார்க்க