தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்
நாகை, மயிலாடுதுறை, திருவாரூரில் பாஜகவினா் போராட்டம்: 185 போ் கைது
நாகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
திருவாரூரில் டாஸ்மாக் மேலாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
நாகப்பட்டினம்/மயிலாடுதுறை/திருவாரூா், மாா்ச் 17: டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவரூரில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 185 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாநில தலைமை அறிவித்திருந்தது. அதன்படி போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா்.
நாகையில்...
அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து நாகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு பாஜக சாா்பில் முற்றுகைப் போராட்டம் மாவட்டத் தலைவா் விஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்தும், அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்தும் முழக்கமிட்டனா். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக பாஜகவினா் 30 பேரை போலீஸாா் கைது செய்தனா். மாநில செயற்குழு உறுப்பினா் நேதாஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருவாரூரில்....
திருவாரூரில் உள்ள டாஸ்மாக் மேலாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். முன்னதாக போராட்ட அறிவிப்பைத் தொடா்ந்து அலுவலக வாசல் மூடப்பட்டிருந்தது.
இதனால் அலுவலக வாசல் முன்பு தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா். தொடா்ந்து, ஊா்வலமாக மன்னாா்குடி சாலைக்குச் சென்று, மறியலில் ஈடுபட முயன்றனா்.
மாவட்டத் தலைவா் விகே. செல்வம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட துணை தலைவா்கள் எம். சங்கா், வி. மணிமேகலை, நகரத் தலைவா் எஸ். கணேசன், ஒன்றிய நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.