செய்திகள் :

நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

post image

எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று(நவ. 26) தொடங்கியது.

கூட்டத்தொடரின் முதல் நாளே எதிர்க்கட்சிகள், அதானி விவகாரத்தை கையில் எடுத்துள்ளன. இதனால் நேற்று இரு அவைகளும் முடங்கியது.

தொடர்ந்து இன்றும் இரு அவைகளிலும் அதானி விவகாரம், வக்ஃபு வாரிய சட்ட திருத்தம், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார்.

மாநிலங்களவை நாளை(நவ. 28) காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அவையின் மரபுகளை உறுப்பினர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துவதாக ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

ஒத்திவைப்புக்குப் பிறகு மக்களவை நண்பகல் 12 மணிக்கு தொடங்கிய நிலையில், மீண்டும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவையும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 3,383 கோடி சொத்துடன் முதலிடம் பிடித்த பாஜக எம்.எல்.ஏ!

மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்த நிலையில், முதல் 10 பணக்கார எம்.எல்.ஏ.க்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.மகாராஷ்டிரத்தில் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களின் சரா... மேலும் பார்க்க

மகாராஷ்டிர தேர்தல்: 85% வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு! பாஜகவில் ஒருவர்கூட இல்லை!

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்களில் 85 சதவிகிதத்தினர் டெபாசிட் இழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதில் காங்கிரஸ் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களே அதிகம்!மகாராஷ்டிர தேர்தல் மு... மேலும் பார்க்க

புது மின்சார ஸ்கூட்டரை பழுதுபார்க்க ரூ.90,000: உரிமையாளர் செய்தது என்ன?

புதிதாக வாங்கிய மின்சார ஸ்கூட்டரில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய, ரூ.90,000 பில் வந்ததால் அதிர்ச்சியடைந்த வாகன உரிமையாளர், வாகனத்தை அடித்து நொறுக்கியிருக்கிறார்.ஆனால், இந்த விடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ப... மேலும் பார்க்க

முதல்வர் பதவியை விரும்பவில்லை: ஏக்நாத் ஷிண்டே

முதல்வர் பதவியை நான் விரும்பவில்லை என்று காபந்து முதல்வராக இருக்கும் சிவசேனை தலைவர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.மகாராஷ்டிர முதல்வர் பதவி யாருக்கு என்பது தொடர்பாக இழுபறி நீடித்து வரும் நிலையில், முன... மேலும் பார்க்க

காங்கிரஸுக்கு எதிர்காலம் இல்லை: எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர தேஷ்முக் வலியுறுத்தல்!

மகாராஷ்டிரத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸின் 16 எம்எல்ஏக்களும் பாஜகவில் சேர வேண்டும் என்று பாஜக தலைவர் ஆஷிஷ் தேஷ்முக் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

தூத்துக்குடி மீனவர்கள் விவகாரம்: ராஜ்நாத் சிங்குடன் கனிமொழி சந்திப்பு!

லட்சத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து திமுக எம்.பி. கனிமொழி கோரிக்கை விடுத்துள... மேலும் பார்க்க