நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்: நரிக்குறவா் கைது
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த தச்சூரில் உரிய அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக நரிக்குறவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா் (படம்).
தச்சூா் நரிக்குறவா் குடியிருப்புப் பகுதியில் உரிய அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக ஆரணி கிராமிய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
இதில், லாலா மகன் பாலு (46) உரிய அனுமதியின்றி ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனா்.