நெப்போலியன் குடும்பத்தின் 900 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு! - சினிமாவை மிஞ்சி...
``நான் விற்பனைக்கு இல்லை'' - ஆர்யன் கான் வெப்சீரியஸை புகழ்ந்தது ஏன்? சசி தரூர் விளக்கம்
பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் தி பட்ஸ் ஆஃப் பாலிவுட் என்ற பெயரில் புதிய வெப் சீரிஸ் இயக்கினார். அந்த வெப் சீரிஸ் நெட்பிலிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.
இதில் லக்ஷ்யா லால்வானி, பாபி தியோல் மற்றும் சாஹர் பம்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த வெப் சீரிஸை சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பார்த்துவிட்டு ட்விட்டர் தளத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், “எனக்கு இரண்டு நாட்களாக உடல்நிலை சரியில்லை. எனவே அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு வீட்டில் இருந்தேன். எனது சகோதரி ஸ்மிதா தரூர் என்னிடம் வெப் சீரிஸ் பார்க்கும்படி கூறினார்.
நான் கம்ப்யூட்டரில் ஆர்யன் கான் இயக்கிய வெப் சீரிஸை பார்த்து முடித்தேன். அந்த வெப் சீரிஸை புகழ வார்த்தைகள் கிடைக்காமல் திணறினேன். அதை இயக்கிய இயக்குனர் மிகவும் துணிச்சலானவர்.
இது போன்ற நையாண்டிகளுக்கு பாலிவுட்டில் துணிச்சல் தேவை. வெப் சீரிஸில் பெரும்பாலும் வேடிக்கையாகவும், சில நேரங்களில் மனதை உருக்குவதாகவும் இருக்கிறது. நெட்பிலிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் இது ஒரு தங்கம்" என்று நீண்ட ஒரு விமர்சனம் கொடுத்திருந்தார்.
ஷாருக் கானின் ட்விட்டர் பக்கத்தில் சசி தரூர், ஆர்யன் கானுக்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த விமர்சனம் வெளியானவுடன் நெட்டிசன்கள் அதனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். சசி தரூர் பகுதி நேர வேலையாக பணம் வாங்கிக்கொண்டு இப்படி விளம்பர விமர்சனம் கொடுக்கிறார் என்று ஒருவர் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு சசி தரூர் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், “நான் விற்பனைக்கு இல்லை நண்பரே. நான் வெளிப்படுத்தும் எந்தக் கருத்துக்கும் இதுவரை யாராலும் பணமாகவோ அல்லது பொருளாகவோ செலுத்தப்பட்டதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆர்யன் கானின் வெப் சீரிஸில் ஷாருக் கான், சல்மான் கான், ஆமீர் கான், கரண் ஜோகர், ரன்பீர் கபூர் உட்பட பலரும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கின்றனர்.




















