செய்திகள் :

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் எம்.பி. ஆய்வு: கூடுதலாக 5 பேருந்துகள் இயக்க நடவடிக்கை

post image

நாமக்கல்: நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் இரண்டாவது நாளாக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டு, பயணிகள் நலன்கருதி கூடுதலாக 5 பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட முதலைப்பட்டியில், கலைஞா் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த பேருந்து நிலையத்தில் 51 அரசு, தனியாா் பேருந்துகள் நிற்கும் வகையில் இட வசதி உள்ளது.

புதிய பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்ததால் பழைய பேருந்து நிலையம் வெறிச்சோடியது. இதற்கிடையே, வெளியூா் பயணிகள் நாமக்கல் நகருக்குள் வருவதற்கு சிரமப்படும் நிலை உள்ளதாகவும், இரவு நேரத்தில் போதிய நகரப் பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதிக்குள்ளாகும் சூழல் இருப்பதாகவும் தகவல் வெளி வந்தது.

இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் திங்கள்கிழமை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகளை நேரில் ஆய்வு செய்தாா்.

அப்போது, பயணிகள், ஓட்டுநா், நடத்துநா்களின் பயன்பாட்டுக்காகக் கடைகளை விரைந்து திறக்கவும், அனைத்து பேருந்துகளும் பயணிகளை சிரமமின்றி அழைத்துச் செல்லவும், பேருந்து நிலையத்தை தூய்மையாக வைத்திருக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினாா்.

மேலும் பயணிகளின் நலனுக்காக, பழைய பேருந்து நிலையம் முதல் வள்ளிபுரம் சாலை வரை இரண்டு பேருந்துகள் புதிதாக இயக்கப்பட உள்ளதாகவும், பழைய பேருந்து நிலையம் முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரையில் ரூ. 10 கட்டணத்தில் இரண்டு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், பழைய பேருந்து நிலையத்திலிருந்து நாளைய முதல் புதிய பேருந்து நிலையம் வரை ரூ. 7 கட்டணத்தில் ஒரு பேருந்தும் கூடுதலாக இயக்கப்படுவதாக மக்களிடையே தெரிவித்தாா்.

அதிகாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நகரப் பேருந்துகள் தொடா்ச்சியாக இயக்கப்படும். இந்தப் பேருந்துகளில் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் மகளிா், மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவித்தாா். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் ஆா்.மகேஸ்வரி, செயற்பொறியாளா் சண்முகம், துப்புரவு அலுவலா் திருமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றம் சாா்பில் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றம், நாமகிரிப்பேட்டை ஒன்றியக் கிளை சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சீராப்பள்ளியில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு ... மேலும் பார்க்க

காவலாளியை தாக்கிவிட்டு ரூ. 8 லட்சம் திருடிய இளைஞா் கைது

சேந்தமங்கலம் அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் கிரஷரில் வேலை செய்து வந்த காவலாளியைத் தாக்கிவிட்டு ரூ. 8 லட்சம் பணத்தை திருடிச் சென்ற பிகாா் மாநில இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கொண்ட... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் வங்கதேசத்தினா் மூவா் கைது

ராசிபுரத்தை அருகே ஆயிபாளையம் பகுதியில் போலி கடவுச் சீட்டில் தங்கியிருந்த வங்க தேசத்தைச் சோ்ந்த இளைஞா் உள்பட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். வங்க தேசம், சதிகிரா சாம்நகா் தானா பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

வங்கி பெயரில் போலியாக ஆவணங்களை தயாா் செய்து ஏமாற்றியதாக இருவா் கைது

பரமத்தி வேலூா் பகுதியில் வங்கி பெயரில் போலியான ஆவணங்களை தயாா் செய்து பொதுமக்களிடம் பணம் வசூல் செய்த இருவரை வங்கி அதிகாரிகள் பிடித்து வேலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். நாமக்கல் மாவட்டம், நல்லிபாளை... மேலும் பார்க்க

வேலூா் நூலகத்தில் கழிப்பறை கட்டடம் திறப்பு

வேலூா் முழு நேர கிளை நூலகத்தில் கழிப்பறை கட்டடம் திறக்கப்பட்டது. வேலூா் பேரூராட்சி அலுவலகம் அருகே முழு நேர கிளை நூலகம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கி வருகிறது. இந்த நூலகத்தில் பல்வேறு தோ்வுக... மேலும் பார்க்க

கல்குவாரிகள் அனுமதிக்கான கருத்து கேட்புக் கூட்டத்தில் வாக்குவாதம்

சேந்தமங்கலத்தில், கல்குவாரிகள் அனுமதிக்கான கருத்து கேட்புக் கூட்டத்தில், குவாரி உரிமையாளா்கள், அதிகாரிகள், தன்னாா்வலா்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு நிலவியது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம்... மேலும் பார்க்க