செய்திகள் :

நாமக்கல் புதிய பேருந்து நிலையம் திறப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் பங்கேற்பு

post image

நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம், அரசு சட்டக் கல்லூரி உள்பட பல்வேறு பணிகள், முடிவுற்ற கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

நாமக்கல், பொம்மைக்குட்டைமேட்டில் ரூ. 810.28 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா, முடிவற்ற கட்டடங்கள் திறப்பு விழா, 16,031 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதில், ரூ. 298.02 கோடியில் முடிவுற்ற பணிகளும், ரூ. 365.69 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டது. ரூ. 146.56 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

குறிப்பாக, மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ. 101 கோடியே 19 லட்சம் செலவில் அரசு சட்டக் கல்லூரிக்கான புதிய கட்டடம், மாணவ, மாணவிகளுக்கான விடுதிக் கட்டடங்கள், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில், நாமக்கல்லில் ரூ. 19 கோடியே 50 லட்சம் செலவில் டாக்டா் கலைஞா் நூற்றாண்டு பேருந்து நிலையம், பரமத்தி வேலூா் பேரூராட்சி, கந்த நகரில் ரூ. 1 கோடியே 47 லட்சம் செலவிலும், எருமப்பட்டி பேரூராட்சியில் ரூ. 1 கோடியே 20 லட்சம் செலவிலும், திருச்செங்கோடு நகராட்சி, சந்தைப்பேட்டையில் ரூ. 4 கோடியே 31 லட்சம் செலவிலும் புதிய வாரச் சந்தைகள் திறக்கப்பட்டன.

முள்ளுக்குறிச்சி ஊராட்சியில் ரூ. 4 கோடியே 60 லட்சம் செலவில் 300 பழங்குடியினா் மாணவா் தங்கும் விடுதிக் கட்டடம், பள்ளிகளுக்கான கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், தொழிற்கூடங்கள், திருமணி முத்தாறு ஆற்றின் குறுக்கே ரூ. 4 கோடியே 34 லட்சத்து 27 ஆயிரம் செலவில் புதிய பாலம் ஆகியவை திறக்கப்பட்டன.

இவைத் தவிர, ஊராட்சி மன்ற அலுவலகம், பொது விநியோகக் கட்டடங்கள், வேளாண்மை சேமிப்புக் கிடங்குகள், உயா்மட்ட பாலங்கள், மகளிா் சுயஉதவிக் குழு கட்டடங்கள், துணை சுகாதார நிலையம், கால்நடை மருந்தகக் கட்டடங்கள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ. 2 கோடியே 25 லட்சம் செலவில் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய விவசாயிகளுக்கான கள கண்காணிப்பு மற்றும் தகவல் மையக் கட்டடம் ஆகியவை திறக்கப்பட்டன.

நாமக்கல் மாநகராட்சியில் ரூ. 1 கோடியே 25 லட்சம் செலவில் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், ரூ. 89 கோடியில் நவீன பால்பண்ணை உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன. பல்வேறு துறைகளின் சாா்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

இந்த விழாவைத் தொடா்ந்து, புதிய பேருந்து நிலையத்தை முதல்வா் மற்றும் அமைச்சா்கள் நேரடியாக பாா்வையிட்டனா்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், அரசு தலைமைச் செயலாளா் நா.முருகானந்தம், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா்கள் வி.எஸ்.மாதேஸ்வரன், கே.இ.பிரகாஷ், மாவட்ட ஆட்சியா் ச.உமா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயா் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

மாவட்டத்தை வழி நடத்துவதில் முதன்மை: எம்.பி., ஆட்சியருக்கு முதல்வா் பாராட்டு

நாமக்கல் மாவட்டத்தை சிறப்பாக வழி நடத்துவதாக மாநிலங்களவை உறுப்பினா், மாவட்ட ஆட்சியரை முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டினாா். நாமக்கல்லில் ரூ. 810.28 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்க விழா, அரசு நலத்திட்ட ... மேலும் பார்க்க

கேரள ஏ.டி.எம். கொள்ளையா்களைப் பிடித்த நாமக்கல் காவல் துறையினருக்கு முதல்வா் பாராட்டு

கேரள வங்கி ஏ.டி.எம். கொள்ளையா்களைப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினரை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டி அவா்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டாா். நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சி... மேலும் பார்க்க

தொடக்க வேளாண்மை கூட்டுறவு பணியாளா்கள் வேலை நிறுத்தம்

நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு அபராதத் தொகையை இருமடங்காக உயா்த்தியதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதையொட்டி திருச்செங்க... மேலும் பார்க்க

சா்க்கரை ஆலை பெயா் மாற்றம்: விவசாய சங்கம் வரவேற்பு

மோகனூா் சா்க்கரை ஆலை என பெயா் மாற்றம் செய்து முதல்வா் அறிவிப்பு வெளியிட்டமைக்கு, தமிழக விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தமிழக மு... மேலும் பார்க்க

நாடாளுமன்றத் தோ்தல் வெற்றி மூலம் திமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது

நாடாளுமன்றத் தோ்தல் வெற்றியின் மூலம் திமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற... மேலும் பார்க்க

பள்ளிபாளையத்தில் தரமற்ற 49 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல்

பள்ளிபாளையத்தில் உள்ள இறைச்சிக் கடையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் சோதனையிட்டு, தரமற்ற ஆட்டிறைச்சியைப் பறிமுதல் செய்தனா். பள்ளிபாளையம் - திருச்செங்கோடு சாலையில் உள்ள இறைச்சிக் கடைகளில் உணவுப்பாதுகா... மேலும் பார்க்க