செய்திகள் :

`நாம் ஆண்ட பரம்பரை...' - அமைச்சர் மூர்த்தி பேச்சால் சர்ச்சை!

post image

சமூகநீதிக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வரும் திராவிட மாடல் அரசு என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் தி.மு.க அரசில், வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக உள்ள பி.மூர்த்தி, சமுதாய விழா ஒன்றில் கலந்துகொண்டு, "நாம் ஆண்ட பரம்பரை" என்று பேசியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பி.மூர்த்தி, உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு விழாவில்

குறிப்பிட்ட சமூக அமைப்பு நடத்தும் அரசு வேலை வாய்பு பயிற்சி மைய விழாவில் அமைச்சர் மூர்த்தி கலந்துகொண்டு பேசியதாகச் சொல்லப்படும் அந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில், "நான் சொல்றேன், நாம் ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். பல வரலாறுகள் மறைக்கப்பட்டிருக்கின்றன. அதை நீங்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். படிச்சிருக்கீங்க, இப்போது நாலு பேர், ரெண்டு பேர் செத்துப்போனால்கூட பெருசா இது பண்றான்.

ஆனால், சுதந்திரத்திற்காக இந்தச் சமுதாயத்தில் ஐந்தாயிரம், பத்தாயிரம் பேர் செத்திருக்காங்கிறதை நீங்கள் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டும். அந்த வரலாற்றையெல்லாம் இந்த நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறேன். ஏன்னு சொன்னீங்கன்னா... அதுக்கு ஒரு வரலாறு இருக்கு, அது அழகர் கோயிலாக இருந்தாலும், திருமோகூர் கோயிலாக இருந்தாலும் ஆங்கிலேயர்களின் படையெடுப்பில் கொள்ளையடித்துச் செல்லும்பொழுது இந்தச் சமூகத்தைச் சார்ந்தவர்கள்தான் முன்னுக்கு நின்று ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள்.

பி.மூர்த்தி

இந்த வரலாறு இன்றைக்கு மறைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல்தான் உசிலம்பட்டி பக்கத்தில் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுருக்கிறார்கள் என்றால், விவசாயத்துறையில், தொழில்துறையில் நம்மவர்கள் அன்று முன்னுக்கு இருந்த நிலையிலும்கூட படிப்பறிவில் பின்தங்கி இருந்த காரணத்தினாலேயே நமது வரலாற்றை வெளிக்கொண்டு வரமுடியாத சூழ்நிலை இருந்திருக்கிறது. ஆனால், இப்போதுதான் அரசு வேலை வாய்ப்புகளில் படிப்படியாக நீங்கள் வந்துகொண்டிருப்பதை பார்க்கும்போது மனதார பாராட்டுகிறேன்" என்று பேசியுள்ளார், அமைச்சர் மூர்த்தி.

மூர்த்தி எப்போது இப்படிப் பேசினார் என்று உறுதியாகச் சொல்ல முடியாத நிலையிலும், பிரமாண்ட விழாக்களை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி வந்த அமைச்சர் பி.மூர்த்தியின் இப்பேச்சு, மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Canada: பதவி விலகுகிறாரா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ? - பரபரக்கும் தகவல்கள்... என்ன நடக்கிறது அங்கே?

கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்யவிருக்கிறார் எனத் தகவல் பரவிவருகிறது. இது குறித்து அவர் உறுதியான முடிவை எடுக்கவில்லை எனினும், ராஜினாமா செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக ராய்டர்ஸ... மேலும் பார்க்க

ஆளுநர் R N Ravi Vs DMK மீண்டும் மோதல், TN Assembly-ல் நடந்தது என்ன? | Imperfect show | Vikatan

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* - வந்தார்... சென்றார் ஸ்பூஃப்.* - TN சட்டமன்றம்: "யார் அது சார்?" சட்டையில் அச்சிடப்பட்ட மேற்கோள், அதிமுகவுடன்?* - ஆளுநர் உரை: ஆளுநர் உரை நிகழ்த்தாமல் பேரவைக்கு வந்து வ... மேலும் பார்க்க

`அதிஷி தனது தந்தையையே மாற்றிவிட்டார்' - பாஜக வேட்பாளர் மீண்டும் சர்ச்சை... அழுத டெல்லி முதல்வர்

ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் டெல்லியில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தகைய சூழலில், கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் எம்.பி டேனிஷ் அலிக்கெதிராக வகுப்புவாத கரு... மேலும் பார்க்க

`திமுக ஓட்டை விழுந்த கப்பல் ஆகிவிட்டது...' - செல்லூர் ராஜூ விமர்சனம்

"கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியதற்கு திமுக-வின் நாளிதழான முரசொலியில் முக்கால் பக்கம் ஒப்பாரி வைத்துள்ளனர்..." என்று செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்துள்ளார்.கே.பாலகிருஷ்ணன்மதுரை புதுவிளாங்குடி பகுதிய... மேலும் பார்க்க