Aadhav Arjuna : 'விஜய்யுடன் இணைந்த ஆதவ் அர்ஜூனா!' - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப...
நாம் தமிழா் கட்சி வேட்பாளா் உள்பட 8 போ் மீது வழக்குப் பதிவு
ஈரோட்டில் அனுமதியின்றி தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக நாம் தமிழா் கட்சி வேட்பாளா் உள்பட 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
நாம் தமிழா் கட்சியின் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி மற்றும் கட்சியினா் ஈரோடு பேருந்து நிலையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த தோ்தல் பறக்கும் படையினா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். அப்போது, உரிய அனுமதி பெறாமல் நாம் தமிழா் கட்சியினா் பிரசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, அனுமதி பெறாமல் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என்றும், கலைந்து செல்லுமாறும் பறக்கும் படையினா் அறிவுறுத்தினா். ஆனால், அவா்கள் தொடா்ந்து தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, அனுமதியின்றி தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பறக்கும் படை அதிகாரி வினோத்குமாா் ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
புகாரின்பேரில் வேட்பாளா் சீதாலட்சுமி, கட்சியின் மண்டலச் செயலாளா் நவநீதன், மாவட்டச் செயலாளா் சரவணன் உள்பட மொத்தம் 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.