8 புதிய போயிங் 737 விமானங்களை இணைத்துக்கொள்ளும் ஸ்பைஸ்ஜெட்!
நாயகியான இன்ஸ்டா பிரபலம் பிரியங்கா மஸ்தானி..! விஜய் ஆண்டனி தயாரிப்பில் புதிய படம்!
இன்ஸ்டா பிரபலம் பிரியங்கா மஸ்தானி முதல்முறையாக திரைப்படத்தில் அறிமுகமாகி இருக்கிறார்.
விஜய் ஆண்டனி தயாரிப்பில் பிரியங்கா மஸ்தானி நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
சேலத்தைச் சேர்ந்த பிரியங்கா மஸ்தானி இன்ஸ்டாகிராம், யூடியூப் மூலம் பிரபலமானார்.
நைட்டி அணிந்து அவர் நடனம் ஆடிய விடியோதான் முதன்முதலில் இணையத்தில் வைரலானது. பின்னர், இவர் சேலத்தில் அமெச்சூர் பாடி பில்டிங்கில் மகளிர் பிரிவில் விருது வென்றதும் குறிப்பிடத்தக்கது.
படங்களுக்கு புரமோஷன் செய்துவந்த இவர் தற்போது நாயகியாக மாறியுள்ளார்.
விஜய் ஆண்டனி தயாரிக்கும் ’பூக்கி’ எனும் படத்தில் நடித்துவருகிறார். நாயகனாக அஜய் திஷன் நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படம் அடுத்தாண்டு பிப்ரவரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் பூஜை விடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட பிரியங்கா மஸ்தானி, “என்னுடைய முதல் படத்தில் நடிக்க, மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
சலீம் படத்தின் ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்து, படத்தினையும் இயக்கியுள்ளார்.