நாளை(மார்ச் 14) பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை(மார்ச் 14) திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை(மார்ச் 14) வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து நடைபெறும் என்றும் இதில் திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | முதல்முறையாக ‘தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை'யை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
2025-2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை(மார்ச் 14) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ளது. முன்னதாக இன்று 2024-25 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.