Samuel Nicholas: "அப்பாக்கிட்ட வாய்ப்புக் கேட்க கூச்சமா இருக்கு!" | Harris Jayar...
``நியாயமான கேள்விகள்; சிந்தனையைத் தூண்டும் படம்" - `சக்தித் திருமகன்' படத்துக்கு ஷங்கர் பாராட்டு
இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட விஜய் ஆண்டனியின் நடிப்பில் அவரின் 25-வது படமாக `சக்தித் திருமகன்' கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.
`அருவி', `வாழ்' ஆகிய திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் அரசியல் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

விமர்சன ரீதியாகவும் பார்வையாளர்களிடத்தில் இப்படத்துக்கு நல்ல ரீச் கிடைத்தது.
இவ்வாறிருக்க அக்டோபர் 24-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் சக்தித் திருமகன் வெளியானது.
இந்த நிலையில் இயக்குநர் ஷங்கர் இப்படத்தை ஓ.டி.டி-யில் பார்த்துவிட்டு படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டியிருக்கிறார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஷங்கர், ``ஓ.டி.டி-யில் சக்தித் திருமகனைப் பார்த்தேன். சிந்தனையைத் தூண்டக்கூடிய படம்.
இயக்குநர் எழுப்பியிருக்கும் கேள்விகள் எனக்கு மிகவும் நியாயமானதாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தன.
நிறைய விஷயங்கள் இப்படத்தில் பேசப்பட்டிருக்கின்றன. கதையின் தீவிரம் எதிர்பாராத வகையில் கூடிக்கொண்டே சென்றது.
அருண் பிரபு, விஜய் ஆண்டனி என மொத்த படக்குழுவும் வாழ்த்துகள்!" என்று பதிவிட்டிருக்கிறார்.

















